இலங்கை செய்தி

சிறிதரன் எம்.பியானால் அவரின் எம்.பி பதவியை பறிப்பார்கள்

சட்டம் தெரிந்தும் சட்டவிரோதமான முறையில் தீர்மானங்களை எடுப்பவர் சுமந்திரன். அவர் ஒரு பொய்யன் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

தேசியத்திற்காக இருந்த கட்சி தமிழரசு கட்சி. இன்று உடைந்துள்ளது. அந்த கட்சியில் இருந்து பலர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது கட்சி தலைவர் இல்லாமல் இயங்கும் ஒரு கட்சியாக காணப்படுகிறது. கட்சியின் பொது செயலாளர் முடிவெடுக்கும் தருணங்களில் மருத்துவ சான்றிதழ் வழங்கிக்கொண்டு இருக்கின்றார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கலந்துடையாடலுக்கு வருமாறு கடிதம் அனுப்பினார்கள்.

நான் மற்றும் சிறிதரன் உள்ளிட்டோர் கலந்துரையாடல் தானே என வெளிநாடுகளுக்கு பயணமான நேரம் சில தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

அந்த தீர்மானங்கள் ஏக மனதாக எடுக்கப்படவில்லை அவற்றை அன்றைய கூட்டத்தில் பலர் எதிர்த்தும் இருந்தனர்.

சட்டம் தெரிந்தும் சட்டவிரோதமான முறையில் தீர்மானங்களை எடுத்தவர் தான் சுமந்திரன்.

மத்திய குழு கூட்டத்தில் பல தடவைகள் சுமந்திரனுக்கு நேரே சொல்லி இருக்கிறேன், நீங்கள் ஒரு பொய்யன் என.

தமிழரசு கட்சியில் புலி நீக்க அரசியல் , தமிழ் தேசிய நீக்க அரசியல் என்பவற்றை திறம்பட செய்கின்றனர். சிறிதரனை கூட விரைவில் வெளியேற்றுவார்கள்.

தற்போது ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தமை குறித்து விளக்கம் கோரி கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.

மத்திய குழுவில் தேர்தலின் பின்னரே விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது விளக்கம் கோரி எனக்கு , சிறிதரன் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். சிறிதரன் அந்த கடிதத்தை பெற்று விட்டார்.

சிறிதரன் தேர்தலில் வென்றால் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார். அப்போது சிறிதரனை கட்சியின் அடிப்படை உறுப்புரிமையை இருந்து நீக்குவார்கள்.

அதனூடாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி , சுமந்திரனுக்கோ , அவர் சார்ந்த ஒருவரோ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார். அதே அதனை அவர்கள் நிச்சயம் செய்வார்கள்.

நாங்கள் பேசாமல் இருந்தமையால் தான் தமிழரசு கட்சி உடைந்தது. அதற்க்கு நாங்களும் பொறுப்பேற்க வேண்டும்.

எல்லோரையும் மீண்டும் ஒன்றாக்க வேண்டும். இல்லா விட்டால் சிதைந்து போய்விடுவோம்.

அதனால் தான் தீவிர தேசிய பற்றுள்ளவர்கள் ஒன்றிணைந்த கட்சியாக ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு என உதயமாகும்.

அதில் தேசியத்தின் பால் நாட்டமுள்ளவர்கள் அனைவரையும் உள்ளீர்ப்போம்.

சுமந்திரனுக்கு சவால் விடுகிறேன் முடிந்தால் இந்த முறை தேர்தலில் யாருடைய அனுசரணையும் இல்லாமல் மக்கள் தனக்கு தான் வாக்களித்துள்ளார்கள் என்பதனை நிரூபிக்கட்டும்.

அங்கே இரண்டாவது விருப்பு வாக்கு ஊடாக வர கூடாது. எனக்கு வாக்குகள் உண்டு என அவர் நிரூபித்து காட்டட்டும் என மேலும் தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை