2024 தேர்தலில் புட்டின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து யாரும் நிற்க மாட்டார்கள்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால் அவருடன் யாரும் போட்டியிட முடியாது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி தனது வேட்புமனுவை பரிந்துரைப்பதாக இன்னும் அறிவிக்கவில்லை, என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஆனால் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கிறார் என்று நாங்கள் கருதினால், தற்போதைய கட்டத்தில் ஜனாதிபதிக்கு உண்மையான போட்டி இருக்க முடியாது என்பது வெளிப்படையானது” என்றும், விளாடிமிர் புடின் “மக்களின் முழுமையான ஆதரவை அனுபவிக்கிறார்” என்றும் அவர் கூறியுள்ளார்.
விளாடிமிர் புடின் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ரஷ்யாவில் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
கடந்த ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீதான மாஸ்கோவின் படையெடுப்பு, 1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் மேற்கு நாடுகளுடன் கடுமையான மோதலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போர் விவகாரம் நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும். மக்கள் புட்டினை ஆதரப்பதாகவே சொல்லப்படுகிறது.