பொழுதுபோக்கு

மணி ரத்னம் சொன்னால் விமானத்தின் மீது கூட ஏறி ‘தைய தையா’ஆடுவேன் – ஷாருக்கான்

மணி ரத்னம் சொன்னால் விமானத்தின் மீது கூட ஏறி ‘தைய தையா’ பாடலுக்கு நடனமாடுவேன் என ஷாருக்கான் கூறியுள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றின் விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஷாருக்கான், இயக்குநர் மணி ரத்னம், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற நடிகர் ஷாருக்கான் மற்றும் மணி ரத்னம் இடையில் நடந்த சுவாரஸ்யமான உரையாடல்தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விருதைப் பெற்றதும் அங்கிருந்த தொகுப்பாளர், ‘’உயிரே’ படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிறது. அடுத்து எப்போது மணி ரத்னம் இயக்கத்தில் நடிப்பீர்கள்?’ எனக் கேட்கப்பட்டது.

உடன் மேடையில் ஷாருக்கானுடன் மணி ரத்னமும் இருந்தார். அவரிடம் திரும்பிய ஷாருக், ‘ஒவ்வொரு முறை உங்களை சந்திக்கும் போது நான் கேட்கும் கேள்வியை இப்போது எல்லோர் முன்னிலையிலும் கேட்கிறேன். சொல்லப்போனால் நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். என்னுடன் ஒரு படம் பண்ணுங்கள். இந்தமுறை நீங்கள் சொன்னால், விமானத்தின் மீது கூட ஏறி ‘தைய தையா’ பாடலுக்கு நடனமாடுவேன்” என பேசினார் ஷாருக். அதற்கு மணி ரத்னம், ‘”நீங்கள் விமானம் வாங்கும்போது நிச்சயம் மீண்டும் இணையலாம்” என்றார்.

 ‘தைய தையா’ பாடல்

இதைக்கேட்ட ஷாருக்கான், “என் படங்கள் இப்போது வசூல் செய்யும் வேகத்தைப் பார்த்தால் விமானம் வாங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. சீக்கிரம் இணையலாம்” என்றார். கடந்த வருடம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’, ’ஜவான்’ ஆகிய படங்கள் ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்தது. வருடக் கடைசியில் வெளியான ‘டன்கி’ திரைப்படம் ரூ. 500 கோடியை கடந்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்