ஐரோப்பா

கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டால், அதற்கு ஏற்ற வகையில் ஆயுதங்களை பயன்படத்த வேண்டி வரும் – ரஷ்யா!

அமெரிக்கா உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்கினால், மாஸ்கோ “அதேபோன்ற” ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கடந்த வாரம் உக்ரைனுக்கு கொத்து குண்டுகளை வழங்குவதாக அறிவித்தது. இந்த வகையான குண்டுகள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளன.

ரஷ்யா கிளஸ்டர் வெடிமருந்துகளை வைத்திருப்பதாகவும், ஆனால் இதுவரை தனது இராணுவப் பிரச்சாரத்தில் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ரஷ்யா உக்ரைனில் கிளஸ்டர் வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதாக அமெரிக்கா முன்பு குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்