பேருவளையில் சிறப்பு நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருள் மீட்பு
பேருவளை(Beruwala), லைட் ஹவுஸ் தீவில்(Lighthouse Island) நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது 4 கிலோகிராமுக்கு மேற்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்(crystal methamphetamine) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடலோர காவல்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 4.2 கிலோகிராம் ஐஸ்(Ice) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருளின் மொத்த தெரு மதிப்பு 68 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.




