மாரடைப்புக்கு முக்கிய காரணமாகும் ஐஸ்கிரீம் – மக்களுக்கு எச்சரிக்கை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு ஐஸ்கிரீம். கடற்கரை, பூங்கா, சினிமா அரங்குகள், என எந்த இடத்திற்கு சென்றாலும் ஒரு ஐஸ்கிரீம் கடையை பார்க்கலாம். அதன் அருமையான சுவை மூலம் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் கொண்டது ஐஸ்கீர்ம். எனினும், ஐஸ்கிரீம் சத்தான உணவு இல்லை என்பதையும் மறுக்க முடியாது. இதனால், ஆரோக்கியத்திற்கு பாதிப்பு நிச்சயம். அந்த வகையில், ஐஸ்கிரீம் அதிகம் சாப்பிடுவதால், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஐஸ்கிரீம் சாப்பிடுவது, கொலஸ்ட்ராலை எகிற வைத்து இதய நோய் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது என்கின்றன ஆய்வுகள். அதுமட்டுமின்றி இதனால் சளி, இருமல் பிரச்சனையும் அதிகம் ஏற்படுகிறது. ஐஸ்கிரீமில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மறுபுறம், ஐஸ்கிரீமில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக உள்ளது. இந்த இரண்டும் ஒன்று சேர்வதால் ஏற்படும் தாக்கம் அதிகம். இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிகப்படியான ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் வாய்ப்பையும் (Health Tips) அதிகரிக்கிறது.
பால் ஆரோக்கியமானது என்றாலும், பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் நல்லதல்ல. ஏனெனில் இதில் அதிக கொழுப்புள்ள கிரீம் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதிக கொழுப்புள்ள பால் பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது, இது கெட்ட கொழுப்பின் அளவை எகிற வைத்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. ஐஸ்கிரீமில் கார்போஹைட்ரேட்டுகளின் அளவு மிக அதிகமாக உள்ள நிலையில், அதிக அளவிலான சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதால் உடலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று ஐஸ்கிரீம்களை சாப்பிட்டால், தோராயமாக 1000 கலோரிகள் என்ற அளவில் உடலில் சேரும்.
இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தவிர்க்க வேண்டியவை
ஐஸ்க்ரீம் மட்டுமல்ல, ரொட்டி, பாஸ்தா, மிட்டாய்கள், கேக் அல்லது ஐஸ்கிரீம் போன்ற கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உண்ணும்போது அவர்களுக்கு இதயத் துடிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும். எப்போதாவது ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, தினமும் சாப்பிடுபவர்களுக்கு ஐஸ்கிரீம் தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்
இதய நோய் அல்லது மாரடைப்பு அபாயத்தை நீக்க, பொரித்த உணவுப் பொருட்கள், குறிப்பாக சிப்ஸ், எண்ணெயில் பொரித்த சிற்றூண்டிகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பதப்ப்படுத்தப்பட்ட உணவுகள் துரித உணவுகள் ஆகியவற்றையும் மிக குறைந்த அளவில் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிக சர்க்கரை கலந்த கொண்ட சோடா அல்லது பிற செயற்கை பானங்களைத் தவிர்க்கவும். தேநீர் மற்றும் காபியும் குறைந்த அளவில் சாப்பிடுங்கள்.