அமெரிக்காவில் மற்றுமொரு குடியேறி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட ICE முகவர்!
மினியாபோலிஸில் குழப்பமான போராட்டங்களுக்கு மத்தியில், ICE முகவரால் மற்றுமொரு நபர் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பனி மண்வெட்டி மற்றும் துடைப்பக் கைப்பிடியால் ( broom handle) தாக்கப்பட்டதை தொடர்ந்து உயிருக்கு பயந்து முகவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
வெனிசுலா குடியேறி ஒருவரின் காலில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் நிலையான நிலையில் இருப்பதாகவும், முகவர் மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்தில் போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறை அதிகாரிகள் கையெறி குண்டுகளுடன் தயார் நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே (Jacob Frey) , ICE ‘குழப்பத்தை உருவாக்கியதற்காக’ விமர்சித்துள்ளார்.





