மகனை மன்னித்து விட்டுவிட மாட்டேன் – அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பழக்கத்தை மறைத்து துப்பாக்கி வாங்கிய வழக்குக்கில் பைடனின் மகன் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் தனது மூத்த மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் அவரை மன்னித்து விட்டுவிட மாட்டேன் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஹண்டர் பைடன், தனக்கு கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதை மறைத்து 2018-ஆம் ஆண்டு கைத்துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வாங்கியதாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது.
ஆட்சியில் உள்ள ஜனாதிபதி மகன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.
(Visited 49 times, 1 visits today)





