7 மாதங்களில் 7 போர்களை நிறுத்திவிட்டேன் – நோபல் பரிசு வேண்டும் என கோரும் டிரம்ப்

ஜனாதிபதியாக பதவியேற்று ஏழே மாதங்களில் ஏழு போர்களை தாம் நிறுத்திவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
ஐ.நா வின் 80வது பொது சபை கூட்டத்தில் டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகின் வேறு எந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமரோ, ஏன் ஐ.நா. சபையோ கூட செய்யாத செயலாக அதனை தான் செய்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏழு மாதங்களில் மட்டும், இந்தியா – பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நான் நிறுத்தியுள்ளேன். உலக பிரச்சினைகளை தீர்த்த தமக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும். ஆனால், ஐ.நா., மற்றும் உலக நாடுகளுக்கு போர்களை நிறுத்துவதில் எந்த அக்கறையும் இல்லை.
ஆயுதப் போர் கடந்த, ஏழு மாதங்களில், இந்தியா – பாகிஸ்தான் உட்பட ஏழு போர்களை நான் நிறுத்தியுள்ளேன். இதில் சில போர்கள் நீண்ட காலம் நடந்து வந்தன. மேலும், அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயமும் இருந்தது.
என்னுடைய தலையீட்டால், இந்த போர்கள் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளன. ஐ.நா., செய்ய வேண்டியதை நான் செய்துள்ளேன். ஆனால், அதற்கான பாராட்டுகள் எனக்கு கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதை நான் தடுத்து நிறுத்தியுள்ளேன்.
இந்த போர்களை நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுக்காத ஐ.நா., எனக்கு எந்த உதவியும் செய்யவும் முன்வரவில்லை. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நான் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டேன்.
ஆனால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா, சீனா போன்றவை கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம், இந்தப் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதுபோலவே, ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்கி வருகின்றன. இதனால், இந்தப் போரை நிறுத்த முடியவில்லை.
இதனால், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளேன்.
இதுபோலவே, மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான போரும் முடிவுக்கு வரவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.