உலகம் செய்தி

08 மாதங்களில் 08 போர்களை நிறுத்தினேன் – ட்ரம்ப் பெருமிதம்!

தனது நிர்வாகம் 08 மாதங்களில் 08 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே விரிவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மேற்பார்வையிட இன்று  மலேசியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அங்கு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், எனது நிர்வாகம் எட்டு மாதங்களில் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில் இதுவும் ஒன்று.

நாங்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் போர்களை முடிவுக்கு கொண்டுவந்தோம். இன்னும் ஒன்று மட்டுமே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு இந்த கோடையில் உதவிய அமெரிக்க ஜனாதிபதி, “அமெரிக்காவின் சார்பாக இந்த மோதலைத் தீர்க்க உதவுவதில் நான் பெருமைப்படுகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

(Visited 5 times, 5 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி