அனுபமா வேலை இல்லாமல் வீட்டில் இருந்த கதை தெரியுமா?

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.
தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் இந்த ஆண்டு டிராகன் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார்.
இதில், “ரங்கஸ்தலம் படத்திற்காக இயக்குநர் சுகுமார் சார் என்னை அணுகினார். நான் அப்படத்தில் நடிக்க சரி என கூறி, தயாராக இருந்தேன். ஆனால், அவர்கள் திடீரென எனக்கு பதிலாக வேறொரு நடிகையை கமிட் செய்துவிட்டார்கள்”.
“ஆனால், நான்தான் அந்த படத்தை நிராகரித்ததாக மீடியாவில் எல்லாம் வதந்திகள் பரவியது. இதனால் ஆறு மாதங்கள் நான் வேலை இல்லாமல் இருந்தேன்” என அனுபமா பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)