இலங்கை: நான் தேசிய பட்டியல் இடத்துக்கு தகுதியானவள்: ஹிருணிகா பிரேமச்சந்திர
சமகி ஜன பலவேகய (SJB) தனது ஐந்து இடங்களில் ஒன்றை பெண்ணுக்கு ஒதுக்கும் பட்சத்தில், தான் தேசியப் பட்டியல் இடத்துக்குத் தகுதியானவர் என ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று தெரிவித்தார்.
“நான் 30,000 க்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளேன், அது கணிசமான தொகையாகும். தவிர, நான் SJBக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.





