சிங்கப்பூரில் மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த கணவர்

சிங்கப்பூரில் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபருக்கு 3 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனைவி வீட்டைவிட்டு வெளியேறினால் குழந்தையைக் கொல்லப்போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.
குழந்தை உறங்கிக்கொண்டிருந்ததால் தொலைபேசியில் உரக்கப் பேசவேண்டாம் என்று அந்த நபரின் மனைவி கூறியிருந்தார்.
கோபத்தில் அந்த 24 வயது நபர் அவ்வாறு நடந்துகொண்டார். அச்சுறுத்தல் ஏற்படுத்தி, வேண்டுமென்றே காயம் விளைவித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இன்னொரு சம்பவத்தில் தமது Singpass விவரங்களை வெளியிட்டதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும் 3 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும். அந்த நபர் அவரது மனைவி ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. சம்பவம் சென்ற ஆண்டு மே 14ஆம் திகதி நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
(Visited 18 times, 1 visits today)