மெக்சிகோவை உலுக்கிய ஓடிஸ் சூறாவளி : 27 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளி தாக்கியதில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கடற்கரை ரிசார்ட் நகரமான அகாபுல்கோவை தாக்கும் முன் சூறாவளி நேற்று (25.10) தீவிரமடைந்தது.
குறித்த சூறாவளி காரணமாக பலப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அமெரிக்க காலநிலை விஞ்ஞானி ஆண்ட்ரா கார்னர் கருத்துப்படி, அட்லாண்டிக் சூறாவளியானது சிறிய புயல்களிலிருந்து சக்திவாய்ந்த மற்றும் பேரழிவு வானிலை அமைப்புகளுக்கு விரைவாக தீவிரமடைவதற்கு முன்பை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)