ஜப்பான் விசாவிற்காக வரிசையில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான ரஷ்ய பிரஜைகள்!

ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான பிரஜைகள் ஜப்பானிய விசாக்களைத் தேடி வரிசையில் காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பாவின் பெரும்பகுதிக்கான பயணம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் விடுமுறை காலத்தை கழிக்க ஜப்பானிக்கு பயணயம் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நேரடி விமானங்கள் தற்போது கிடைக்கவில்லை என்றாலும், மாஸ்கோவில் உள்ள ஜப்பானிய தூதரகம், ரஷ்ய பார்வையாளர்களின் அதிகரிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய சுற்றுலாத் துறை ஒன்றியத்தின் துணைத் தலைவர் டிமிட்ரி கோரின், ஜப்பானில் உள்ள ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2024 இல் தோராயமாக 100,000 ஆக இருக்கும் என்று கூறினார்.
(Visited 1 times, 1 visits today)