ஈரானில் கிமு 9550- 10000 காலப்பகுதியில் உப்பு சுரங்கத்தில் புதைந்த மனிதர்கள் : இயற்கையாக பாதுகாக்கப்படும் மம்மிகள்!
ஈரானில் உள்ள ஒரு பழங்கால உப்புச் சுரங்கத்தில் கிமு 9550- 10000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மம்மிகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, இந்த சடலங்கள் “சால்ட்மென்” என்று அழைக்கப்படுகின்றன.
வடமேற்கு ஈரானில் உள்ள மன்செலோ கிராமத்திற்கு அருகிலுள்ள செஹ்ராபாத் உப்பு சுரங்கத்தில் இந்த சடலங்கள் இயற்கையாகவே மம்மி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சுரங்கம் 1993 ஆம் ஆண்டு சுரங்க தொழிலாளர்களால் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஒரு சில ஆண்டுகள் கழித்து மேலும் சடலங்கள் மீட்கப்பட்டன. தற்போதுவரை 06 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அனைத்து சடலங்களும் அவற்றைச் சூழ்ந்திருந்த உப்பு மூலம் குறிப்பிடத்தக்க வகையில் நன்கு பாதுகாக்கப்பட்டன. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உடல்கள் சிதைவடையவில்லை.
முதல் சால்ட்மேன் தலையின் ஆய்வில், சடலத்தின் கண்ணைச் சுற்றி எலும்பு முறிவுகள் மற்றும் தலையில் சேதம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. முன்னணி விஞ்ஞானிகள் அவர்கள் அனைவரும் சுரங்க சரிவில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.