தமிழ்நாடு

இருவரின் தலையைத் துண்டித்து நரபலி!! நடிகர் பார்த்திபன் பதிவிட்ட ட்விட்டால் பரபரப்பு

இரண்டு மனித தலைகளை வெட்டி நரபலி கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை இயக்குநர் பார்த்திபன் பகிர்ந்து, ‘இது என்னவென்று தெரிந்தால் சொல்லுங்கள்’ என்று ட்விட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு மனித தலைகளை வெட்டி வாழை இலையில் வைத்து பூஜை செய்து கொண்டிருக்கும்படியான நரபலி வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பார்த்து அதிர்ந்து போய், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ‘இது என்னவென்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்! நானும் பொலிஸுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்’ என கூறியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், இரண்டு இளைஞர்களின் தலை துண்டாக வெட்டப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த தலைகளின் பக்கத்திலேயே இருவரது சடலமும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடக்கிறது. காளி வேடத்தில் ஒருவர் கையில் கத்தியோடு ஆடிக்கொண்டிருக்க, சாமியார் ஒருவர் பூஜை செய்கிறார்.இதனை பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சியளிக்கும் இந்த வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இது உண்மையிலேயே நடந்ததா அல்லது சினிமா ஷூட்டுக்கு போடப்பட்ட செட்டப்பா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் நடிகர் பார்த்திபன் இதுகுறித்து பொலிஸில் தெரிவித்துள்ள நிலையில் இச்சம்பவம் குறித்தான விசாரணை தகவலும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்