அமெரிக்காவிற்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி!
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 68 சதவீதமாக குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற நாளில் இருந்து கடுமையான புலம் பெயர் கொள்கைகளை பின்பற்றி வருகின்றார்.
இதற்கமைய சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவிற்குள் நுழையப் பயன்படுத்தும் பல பாதைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் அமெரிக்க அதிகாரிகளால் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களின் எண்ணிக்கையிலும் கனிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
வடக்கு எல்லையில் உள்ள அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) தரவுகளின்படி, 2025 நிதியாண்டில் (அக்டோபர் 2024 முதல் செப்டம்பர் 2025 வரை) 85,747 பேர் எல்லையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது முந்தைய நிதியாண்டில் 198,929 ஆக இருந்த நிலையில் ஏறக்குறைய 57 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





