அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையில் அதிரடி வானிலை மாற்றம்
அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் நீடித்த கடும் வெப்பமான வானிலை முடிவுக்கு வந்துள்ள நிலையில், விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குயின்ஸ்லாந்து முதல் விக்டோரியா வரை பரவவுள்ள இந்த வானிலை மாற்றத்தினால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த வாரம் சிட்னி கடற்கரையில் நிலவிய உயர் அழுத்த மண்டலம் நகர்ந்துள்ளதால், ஜனவரி 15 முதல் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மழை காரணமாக விக்டோரியாவில் நிலவி வந்த காட்டுத்தீ அபாயம் குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





