உளவு குற்றச்சாட்டில் 17 பேருக்கு மரண தண்டனை விதித்த ஹவுதி நீதிமன்றம்
ஏமன்(Yemen) தலைநகரில் உள்ள ஹவுதி(Houthi) கட்டுப்பாட்டு நீதிமன்றம், வெளிநாட்டு அரசாங்கங்களுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 17 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
தலைநகர் சனாவில்(Sanaa) உள்ள சிறப்பு குற்றவியல் நீதிமன்றம், தண்டனை பெற்றவர்கள் அமெரிக்கா(America), இஸ்ரேல்(Israeli) மற்றும் சவுதி(Saudi) உளவுத்துறையுடன் இணைக்கப்பட்ட ஒரு உளவு வலையமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.
17 பேருக்கும் “தடுப்பு நடவடிக்கையாக பொது இடத்தில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலின் மொசாட்(Mossad) உறுப்பினர்கள் உட்பட வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களைச் சேகரித்து அனுப்பியதாக வழக்கறிஞர்கள் குற்றவாளிகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.




