அமெரிக்காவில் பற்றி எரியும் வீடுகள் – தீயணைப்பாளரை போல வேடமிட்ட திருடன்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் மாலிபு நகரில், காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட வீட்டில் திருடச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் தீயணைப்பாளரைப் போல வேடமிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 பேரில் அவரும் ஒருவராகும். தீயில் சேதமடைந்த வீட்டினுள் திருட்டில் ஈடுபட்டபோது அவர் பிடிபட்டார்.
எத்தகைய நெருக்கடி நிலையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த காத்திருக்கும் நபர்கள் இருக்கிறார்கள் என்று லாஸ் ஏஞ்சலிஸ் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
காட்டுத் தீயில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 100,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
(Visited 2 times, 3 visits today)