சி.டி இயந்திரங்களின் செயலிழப்பால் சிக்கலில் உள்ள வைத்தியசாலைகள் – கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் சுகாதாரத்துறை!
அரச வைத்தியசாலைகளில் CT ஸ்கேன் சேவைகள் முற்றிலும் செயலிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மருத்துவர்கள் உட்பட நோயாளிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக 44 CT ஸ்கேன், 13 MRI ஸ்கேன் , 02 PET ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளதாகவும், ஆனால் அவை தற்போது செயலிழந்துள்ளதாகவும் கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மருத்துவமனையில் ஓராண்டுக்கு மேலாக காத்திருப்பு பட்டியல் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், 43 சி.டி ஸ்கேன் இயந்திரங்களில் 12 இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதுடன், அவற்றை சரிசெய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)