கருக்கலைப்பு செய்ய மறுத்த மருத்துவமனைக்கு போலந்தில் அபராதம்!
கர்ப்பம் தனது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்த மருத்துவமனைக்கு போலந்து அதிகாரிகள் கணிசமான அபராதம் விதித்துள்ளனர்.
14 வார கர்ப்பமாக இருந்த 41 வயது பெண், பாபியானிஸ் மருத்துவ மையத்தில் கருக்கலைப்பு செய்ய மருத்துவமனை கூடுதல் ஆவணங்களைக் கேட்டு கருக்கலைப்பு செய்ய மறுத்துவிட்டது.
இந்நிலையில் தேசிய சுகாதார நிதியம் இந்த மறுப்பை சட்டவிரோதமானது எனக் கருதி மருத்துவமனைக்கு 550,000 ஸ்லோட்டிகள் அபராதம் விதித்தது. இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மருத்துவ மையம் திட்டமிட்டுள்ளது.





