இலங்கை சுங்கத்திற்கு 925 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் என நம்பிக்கை!
இவ்வருடம் 925 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (26.10) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சிவலி அருக்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “2017 முதல் 2023 வரை நாங்கள் 742 பில்லியன் ரூபாய்களை வசூலித்துள்ளோம். வருவாய் வசூல் சதவீதத்தின்படி, டிசம்பர் மாதத்திற்குள் 925 பில்லியன் ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
“இலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சுங்கம் தொடர்பாக 05 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.”
(Visited 3 times, 1 visits today)