ஐரோப்பா

மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு 40 இந்தியர்களுக்கு கௌரவ விருது

பிரித்தானிய மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு, 40க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கௌவுரவ விருது அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

நவம்பர் மாதம் 14ஆம் திகதி மன்னர் சார்லஸ் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை வெகுவிமர்சியாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் இந்திய வம்சாவளியினர் சிறப்பிக்கப்பட உள்ளனர். அதாவது, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த 40க்கும் மேற்பட்ட கௌவுரவ விருது அளிக்கப்பட உள்ளது.

இதற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 1,171 பேரில் 40க்கும் மேற்பட்டவர்கள் இந்திய வம்சாவளி மருத்துவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆவர்.

பேராசிரியரான புரோகார் தாஸ்குப்தா, தொழிலதிபர் அனுஜ் சண்டே மற்றும் ஹினா சோலங்கி, மருத்துவர் பர்விந்தர் கவுர் அலே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பிரித்தானியாவின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட பின்னர் மூன்றாம் சார்லஸ் கொண்டாட உள்ள முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கதுவிருது

(Visited 18 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்