தேனிலவு சென்ற தமிழ் தம்பதி பாலி தீவில் உயிரிழப்பு

சென்னையை சேர்ந்த புதுமண தம்பதிகள், தேனிலவு சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு இன்பச் சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சென்னையை சேர்ந்த மருத்துவர்கள் ஆன விபூஷ்னியா, லோகேஸ்வரன் ஆகியோருக்கு கடந்த 1ம் திகதி சென்னை பூவிருந்தவல்லியில் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், இந்த புதுமண தம்பதிகள், இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர்.
இதனையடுத்து, பாலி தீவில் விரைவு மோட்டார் படகில் சென்றபோது விபத்து ஏற்பட்டு இருவரும் உயிரிழந்துள்ளனர். தேனிலவு சென்ற புதுமண தம்பதிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 20 times, 1 visits today)