மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு வழங்கும் வீட்டு வைத்தியங்கள்

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக ஏற்படும் பல உடல்நல பிரச்சனைகளில் மலச்சிக்கலும் ஒன்று. மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்வது மிகவும் தவறு. ஏனெனில், இது நாளடைவில் மிகப்பெரிய உடல்நல உபாதையாக உருவெடுக்கும். உடல் பலவீனம் முதல் குடல் பாதிப்பு, மூல நோய் வரை பல பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடும்.
மலச்சிக்கலுக்கான முக்கிய காரணங்கள் (Causes of constipation)
உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கவில்லை என்றால் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாகிறது. அதோடு மிக குறைவான அளவில் தண்ணீர் அருந்துவதும், கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் அதிகம் உட்கொள்வதும் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. இது தவிர, உடல் உழைப்பு இல்லாத உட்கார்ந்த வாழ்க்கை முறை, இரைப்பை குடல் பிரச்சினைகள் மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன. மலச்சிக்கலின் அறிகுறிகளில் பசியின்மை, அமைதியின்மை, பலவீனம், சோர்வு, வயிற்று வலி மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை (Health Tips) பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
மலச்சிக்கலுக்கு 5 வீட்டு வைத்தியங்கள்
சூடான பாலில் நெய்
சூடான பால் அல்லது வெந்நீருடன் நெய்யை உட்கொள்வது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் இந்த பானத்தை அருந்தியவுடன், மலம் கழிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை 15 நிமிடங்களுக்குள் உணர முடியும். ஒரு சிறிய கரண்டியில் நெய்யை எடுத்து இளஞ்சூடான அல்லது சூடான பாலில் கலந்து குடிக்கவும். நெய் சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது அதே நேரத்தில் சூடான பால் வயிற்றை விரைவாக சுத்தம் செய்ய உதவுகிறது.
ஊறவைத்த உலர்திராட்சை
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற உலர் திராட்சை ஒரு சிறந்த மருந்து. 8 முதல் 10 திராட்சைகளை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் இந்த திராட்சையை சூடான பாலுடன் சாப்பிடுங்கள். இது வயிற்றை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி உடலில் உள்ள பலவீனத்தையும் நீக்குகிறது.
சீரகம் மற்றும் ஓமம்
வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு சீரகம் மற்றும் ஓமம் மிகவும் நன்மை பயக்கும். அவை அமிலத்தன்மை, வாந்தி, வயிற்று வலி மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கின்றன. இதனுடன், அவை மலமிளக்கியாகவும் செயல்படுகின்றன. இதற்கு இரண்டு ஸ்பூன் சீரகத்தையும் இரண்டு ஸ்பூன் ஓமத்தையும் வறுத்து அரைக்கவும். இப்போது அதில் அரை ஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து வெந்நீரில் கலந்து உட்கொள்ளவும். சீரகம் மற்றும் ஓமம் இரண்டும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும், கருப்பு உப்பு செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
திரிபலா பொடி
திரிபலா பொடி வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் அருமந்தாக பல ஆண்டு காலங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. மலச்சிக்கல் தீர, சம அளவு ஓமம், திரிபலா மற்றும் கல் உப்பு ஆகியவற்றைக் கலக்கவும். இந்த பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்வதன் மூலம் நீண்டகால மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
எண்ணெய் மசாஜ்
ஆயுர்வேதத்தில், சூடான எண்ணெய் மசாஜ் மலச்சிக்கலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. வெதுவெதுப்பான எண்ணெயில் ஓமம் கலந்து வயிற்றின் கீழ் பகுதியில் மசாஜ் செய்யவும். இந்த மசாஜ் வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. எண்ணெயில் இருந்து வரும் வெப்பம் தசைகளை தளர்த்தவும், வயிற்றுப் பிடிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.