உலகம்

காசாவில் வான்வழித் தாக்குதலை நடத்திய இஸ்ரேல் – 09 பேர் பலி!

  • February 15, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 09 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் போர் நிறுத்தத்தை மீறி செயற்பட்டமைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இடம்பெயர்ந்த குடும்பங்கள் வசித்து வந்த கூடாரத்தை நோக்கி இந்த வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் தெற்கில் உள்ள கான் யூனிஸில் மற்றொரு தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் 05 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத போர்நிறுத்தத்தில் இருந்து […]

உலகம்

ஜெனீவாவில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை – முரண்பட்டு நிற்கும் அமெரிக்கா, ஈரான்!

  • February 15, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் வரும் வாரம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இரு நாடுகளும் முரண்பட்ட கொள்கைகளால் பிளவுப்பட்டு நிற்கின்றன. வொஷிங்டன் ஈரானின் ஏவுகணைத் திட்டத்தை மட்டுப்படுத்தவும், அதன் அனைத்து அணுசக்தி செறிவூட்டலையும் முடிவுக்குக் கொண்டுவரவும் விரும்புகிறது. ஆனால் ஈரான் இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. அத்துடன் ட்ரம்ப் இரண்டாவது விமானந்தாங்கி கப்பலை  மத்திய கிழக்கிற்கு அனுப்புவதாகக் கூறியுள்ளதுடன், ஆட்சி மாற்றம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கிடையே ஈரான் ஜனாதிபதி […]

உலகம்

அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை – வெற்றிகரமாக நாடு கடத்தப்பட்ட ISIS போராளிகள்!

  • February 15, 2026
  • 0 Comments

சிரியாவிலிருந்து ஈராக்கிற்கு 5,700 க்கும் மேற்பட்ட ISIS போராளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகிய மேற்படி பணிமாற்ற நடவடிக்கை கடந்த 23 நாட்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்கப் படைகள் 5,700 க்கும் மேற்பட்ட வயது வந்த ஆண் ISIS போராளிகளை சிரியாவில் உள்ள தடுப்பு மையங்களிலிருந்து ஈராக்கிய காவல் நிலையத்திற்கு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள அறிக்கையில், […]

உலகம்

பாலஸ்தீனத்திற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக அழைப்பு – பலர் ஆதரவு!

  • February 15, 2026
  • 0 Comments

பாலஸ்தீனத்திற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக  100க்கும் மேற்பட்ட முக்கிய இசைக்கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள்  திறந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள், பாலஸ்தீன மக்களின் இருப்பு உரிமையைப் பாதுகாப்பவரான பிரான்செஸ்கா அல்பானீஸுக்கு ( Francesca Albanese) முழு ஆதரவையும்” வழங்கினர். காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை வெளிப்படையாக விமர்சித்த அல்பானீஸ், “மனிதகுலமாக நமக்கு ஒரு பொதுவான எதிரி இருக்கிறார்” என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார். […]

இலங்கை செய்தி

17 ஆம் திகதி இலங்கை வருகிறார் பிரிட்டன் துணை பிரதமர்!

  • February 15, 2026
  • 0 Comments

பிரிட்டன் துணைப் பிரதமரான டேவிட் லம்மி David Lammy , எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) இலங்கைக்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொள்கின்றார். இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரையும் அவர் சந்திப்பார் என தெரியவருகின்றது. மேலும், “குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான உலகளாவிய சாசனம்” (Charter for the Global Campaign […]

இலங்கை செய்தி

டெல்லி விஜயத்தின்போது பிரான்ஸ் ஜனாதிபதியை சந்திக்க அநுர திட்டம்!

  • February 15, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு AI Impact Summit டெல்லியில் நாளை ஆரம்பமாகின்றது. எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் உச்சி மாநாட்டில் அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்பார் என தெரியவருகின்றது. எனினும், […]

ஐரோப்பா

UKவில் பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து பாரிய நிதிமோசடி – சிறை செல்லும் குற்றவாளி!

  • February 15, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து ஆயிரக்கணக்கான பவுண்டுகளை மோசடி செய்த நபர் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய குற்றவியல் ஏஜென்சியின் விசாரணைகளை தொடர்ந்து பிராட்ஃபோர்டைச் (Bradford) சேர்ந்த 32 வயதான சிப்டைன் ஹுசைன் (Sibtain Hussain) என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் பல்கலைக்கழக மாணவர்களிடம்  ‘நிதி திறன்’, ‘மாணவர் சேவைகள்’ மற்றும் ‘தங்குமிடம் வைப்புத்தொகை’ ஆகியவற்றுக்கான ஆதாரங்களை பெற கட்டணங்களை வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்காக போலியான மின்னஞ்சல்கள், மாற்றுப்பெயர்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை […]

அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு: அரசு உறுதி!

  • February 15, 2026
  • 0 Comments

“தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக நிச்சயம் தீர்வு காணப்படும். புதிய அரசமைப்புக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது.” என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் undaralingam Pradeep தெரிவித்தார். “ இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்துக்காக தீர்வை கொண்டுவருவதைவிட நிலையான தீர்வை அடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஜனரஞ்சக முடிவுகளைவிட,  அனைத்து மக்களும் ஏற்கும் முடிவாக அது அமைய வேண்டும். தமிழ் பேசும் மக்கள் […]

செய்தி

பங்களாதேஷின் புதிய பிரதமர் 17 ஆம் திகதி பதவியேற்பு: 13 நாடுகளுக்கு அழைப்பு!

  • February 15, 2026
  • 0 Comments

பங்களாதேஷின் புதிய பிரதமராக பி.என்.பி. BNP கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் tarique rahman நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (17) பதவியேற்கவுள்ளார். நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கை, சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

இருளில் இருந்து ஒளியைத் தேடும் பயணம் : சஜித்தின் மகா சிவராத்திரி வாழ்த்து!

  • February 15, 2026
  • 0 Comments

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களுக்கு  மகா சிவராத்திரி வாழ்த்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தெரிவித்துள்ளார். இருளில் இருந்து ஒளியைத் தேடும் ஒரு ஆன்மீகப் பயணம் என்றும், வழிபாடு, பக்தி மற்றும் தியானம் மூலம் மனதைத் தூய்மைப்படுத்தி அநீதி, அறியாமை மற்றும் ஆணவத்தை வெல்ல தனிநபர்களை வழிநடத்தும் ஒரு உன்னதமான இரவு என்றும் அவர் இந்த விழாவை விவரித்தார். சிவபெருமான் அழிவின் மூலம் புதுமைகளைப் படைப்பதை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும்போது, ​​அவர்கள் ஒரு […]

error: Content is protected !!