இந்தியா

புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு 94.5% குழந்தைகள் உயிர் பிழைப்பு – ஆய்வில் தகவல்

  • February 16, 2026
  • 0 Comments

இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு 94.5% குழந்தைகள் உயிர் பிழைத்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சர்வதேச குழந்தை புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தன்று, அந்நாட்டின் முதல் ஆராய்ச்சி மூலம் புற்றுநோய் சிகிச்சை பெற்ற குழந்தைகள் குறித்து முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 20 புற்றுநோய் சிகிச்சை மையங்களில் கடந்த 2016 முதல் 2024 வரை சிகிச்சை பெற்ற 5,400 குழந்தைகளின் தகவல்களை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சி, புற்றுநோய்க்கு எதிரான தொடர்ச்சியான கவனம் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாம்மி நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

  • February 16, 2026
  • 0 Comments

துணைப் பிரதமர் டேவிட் லாம்மி (David Lammy) ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை (17) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என்றும்பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரித்தானியா பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பார்வையிட்டு குழந்தைகள் பாதுகாப்புக்கான உலகளாவிய வணிக ஒப்பந்ததிலும் துணைப் பிரதமர் டேவிட் […]

ஐரோப்பா செய்தி

கோவிட் காலக் கல்வி விவகாரம் – இங்கிலாந்தில் 36 பல்கலைக்கழகங்களுக்கு எதிராக மாணவர்கள் சட்ட நடவடிக்கை

  • February 16, 2026
  • 0 Comments

கொவிட் தொற்றுநோய் காலத்தில் முழுமையான கல்வி சேவையை பெறவில்லை என குற்றம் சுமத்தி, இங்கிலாந்தில் மேலும் 36 பல்கலைக்கழகங்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டு வருகின்றன. 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமான தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்கள், தாங்கள் செலுத்திய முழுக் கல்விக் கட்டணத்திற்கு இணையான கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்று தெரிவித்து இழப்பீடு கோரத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்பு லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவுக்கு இடையே தீர்வொன்று எட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மேலும் […]

உலகம்

ஈரானில் தனது பிள்ளையை கொல்லும் தோட்டாவிற்கு பணம் செலுத்திய பெற்றோர்!

  • February 16, 2026
  • 0 Comments

ஈரானில் சமீபத்தில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில், தனது மகனை கொல்ல பெற்றோரே தோட்டாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 37 வயதான  மகன் ஹூமானை  (Hooman) கொல்லும் தோட்டாவிற்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹூமன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​ பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துமனையில்  உள்ள கொள்கலன்  ஒன்றில் அவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. குறித்த உடலை பெற்றுக்கொள்ள  வெடிமருந்துகள் மற்றும் பிணவறை கட்டணம் போன்ற செலவுகளைச் செலுத்த பெற்றோர் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் ரயில் தடம் புரண்டு விபத்து – 05 பேர் படுகாயம்!

  • February 16, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு அருகே இன்று ஏற்பட்ட பனிச்சரிவால் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த ரயிலில் 29 பேர்  பயணித்த நிலையில், அதில் 05 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஏனைய 04 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்தின் சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதேவேளை குறித்த   ரயில் பாதை, குறைந்தபட்சம் நாளைக் காலை வரை மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் […]

விளையாட்டு

இத்தாலி உடனான போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி

  • February 16, 2026
  • 0 Comments

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. டெல்லியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் வில் ஜாக்ஸ் 53 ஓட்டங்களை பெற்றார். […]

இலங்கை செய்தி

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு

  • February 16, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் எதிர்பாராத அனர்த்த நிலைமைகளால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் இணைந்து விசேட கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத சந்தர்ப்பத்தில் அல்லது ஏதேனும் காரணத்தினால் பரீட்சைக்குச் செல்வதில் சிரமத்தை எதிர்கொண்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தைத் தொடர்புகொள்வதற்காக நேரடித் தொலைபேசி இலக்கங்கள் […]

உலகம்

நியூசிலாந்தின் சில பகுதிகளில் அவசரநிலை அறிவிப்பு – பல இடங்களில் மின் துண்டிப்பு!

  • February 16, 2026
  • 0 Comments

நியூசிலாந்தில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெலிங்டனில் இரவு முழுவதும் மணிக்கு 193 கிமீ வேகத்தில் காற்று வீசியதாகவும், மரங்கள் முறிந்து விழுந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் வெலிங்டனில் சுமார் 10,000 வாடிக்கையாளர்கள் உட்பட, பிராந்தியம் முழுவதும் 30,000 க்கும் மேற்பட்ட சொத்துக்களுக்கு மின் துண்டிப்பு அமுற்படுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வெலிங்டனில் இருந்து புறப்படும் பெரும்பாலான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் விமான நிலையம் […]

இலங்கை செய்தி

” அநுரவின் அழைப்பின் பின்னரே விளையாடும் முடிவை எடுத்தது பாகிஸ்தான்”

  • February 16, 2026
  • 0 Comments

“பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை வருகையானது , இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும்.” இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் Syed Mohsin Raza Naqvi, மற்றும் மனிதவள அபிவிருத்திக்கான அமைச்சர் chaudhry Salik Hussain ஆகியோர் உள்ளிட்ட தூதுக்குழுவுடனான சந்திப்பு இன்று (16) நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போதே அநுரகமார திஸாநாயக்க மேற்கண்டவாறு […]

இலங்கை செய்தி

யாழ். கோப்பாயில் மோதல்: நபரொருவர் அடித்துக் கொலை!

  • February 16, 2026
  • 0 Comments

யாழ்.Jaffna கோப்பாய் Coppai பகுதியில் இன்று (16) மாலை இடம்பெற்ற மோதலில் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை வீதியில் வசிக்கும் 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். போக்குவரத்துப் பாதை தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக நீதிவானின் […]

error: Content is protected !!