உலகம்

வங்கதேசத்தில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு!

  • February 17, 2026
  • 0 Comments

வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பிற சட்டமன்ற உறுப்பினர்கள்  இன்று (17) காலை பதவியேற்றனர். தலைநகரில் உள்ள வங்காளதேச தேசிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் பதவியேற்பு அறையில் நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உதீன் (Nasir Uddin) முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளனர். அவர்களைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட சுயாதீன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சிகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம் […]

இலங்கை

இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி நாட்டை வந்தடைந்தார்!

  • February 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி (David Lammy) இன்று இலங்கை வந்தடைந்தார். இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  இலங்கைக்கான இங்கிலாந்து உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick),  இலங்கைக்கு தனது முதல் வருகையை மேற்கொண்ட துணைப் பிரதமர் டேவிட் லாம்மியை (David Lammy) வரவேற்றார். இந்த விஜயம் இங்கிலாந்து-இலங்கை கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் அதே வேளையில், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இங்கிலாந்து வழங்கிய மனதாபிமான உதவிகள் மக்களை சென்றடைந்துள்ளதையும் பாார்வையிடுவார் […]

அரசியல் இலங்கை செய்தி

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்மீது அரசியல் போர் தொடுப்பு: ஆளுங்கட்சி பதிலடி!

  • February 17, 2026
  • 0 Comments

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என தென்னிலங்கையிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி UNP , ஐக்கிய மக்கள் சக்தி SJP மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP என்பனவே இவ்வாறு வலியுறுத்தியுள்ளன. எனினும், அரசியல் காரணங்களுக்காக எதிரணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஏற்க வேண்டியதில்லை என ஆளுங்கட்சி அறிவித்துள்ளது. சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து ஐக்கிய தேசியக் […]

உலகம்

ஒரு புறம் பேச்சுவார்த்தை, மறுபுறம் போர் பயிற்சி : மத்தியக் கிழக்கில் பரபரப்பு!

  • February 17, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ச்சியான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுடன் இன்று பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஜலசந்தியில் “சாத்தியமான பாதுகாப்பு மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு” காவலர்களைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த போர் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எண்ணெய் கப்பல்கள் ஈரானின் ஜலசந்தியை கடந்து பயணிக்கின்ற நிலையில், இந்த போர் பயிற்சி பற்றிய அறிவிப்புகள் வந்துள்ளன. ஒருபக்கம் […]

உலகம்

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று!

  • February 17, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் இன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. தெஹ்ரான் ஒரு   ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக  ட்ரம்ப் கூறியுள்ளார். “நான் மறைமுகமாக அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவேன். அவை மிகவும் முக்கியமானதாக இருக்கும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார். இதற்கிடையே தெஹ்ரான் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால் மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் ஒன்று அனுப்பப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.  

பொழுதுபோக்கு

மீண்டும் வருகிறார் தொடை அழகி ரம்பா!

  • February 17, 2026
  • 0 Comments

தொடை அழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரம்பா, Rambha சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களத்துக்கு வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரம்பாவின் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் ‘அழகிய லைலா…’ பாடலில் ரம்பாவின் உடை பறக்கும் ஆட்டம் பலரின் மனங்களில் இன்னும் குடிகொண்டுள்ளது. அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரம்பாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ரம்பா, 2010-ம் ஆண்டு தொழில் அதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள், […]

இந்தியா செய்தி

புதுச்சேரியிலும் விஜய்க்கு விசில் சின்னம்!

  • February 17, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்துக்கு தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சி தலைவர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அத்துடன், புதுச்சேரி மாநிலத்திற்கான புதிய நிர்வாகக் குழுவையும் நியமித்துள்ளார். “ புதுச்சேரி மாநிலத்தில் தவெக-வின் அன்றாடப் பணிகளையும் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்க, புதியதாக 30 பேர் கொண்ட நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது. இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தவெக-வுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. […]

விளையாட்டு

சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையுமா சிம்பாப்வே? இன்று பலப்பரீட்சை!

  • February 17, 2026
  • 0 Comments

ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (17) மேலும் மூன்று முக்கியமான லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 31 ஆவது லீக் ஆட்டத்தில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி முற்பகல் 11.00 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது. பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் நியூசிலாந்துக்கு எதிராக கனடா அணி சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது. 32ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து மற்றும் சிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. […]

உலகம்

அமெரிக்காவில் குடும்ப தகராறால் நிகழ்ந்த சோகம் – மூவர் பலி!

  • February 17, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள ரோட் தீவு ஹாக்கி மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தாக்குதல்தாரியும் மேற்படி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.

அரசியல் இலங்கை செய்தி

இனவாதிகளுக்கே தேசிய பாதுகாப்பு குறித்து பதற்றம்: பொன்சேகா சாட்டையடி!

  • February 17, 2026
  • 0 Comments

தேசிய பாதுகாப்பு தொடர்பில் தென்னிலங்கை அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா Field Marshal Sarath Fonseka நிராகரித்துள்ளார். “தேசிய பாதுகாப்பு தொடர்பில் போலி மாயையை தோற்றுவிப்பதற்கு கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டிய தரப்புகள் முற்படுகின்றன.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “தமக்கு தேவையானவற்றை செய்துகொள்வதற்காக போலி மாயையை உருவாக்க மேற்படி தரப்பு முயற்சிக்கின்றது. முப்படையினர் மற்றும் பொலிஸார் உரிய வகையில் செயல்பட்டுவருகின்றனர். ஏதேனும் இடத்தில் குறைபாடு இருந்தால் அதனை நிவர்த்தி […]

error: Content is protected !!