இலங்கை செய்தி

பொருளாதார உறவை வலுப்படுத்த ஜப்பான், இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து!

  • February 17, 2026
  • 0 Comments

“இலங்கை – ஜப்பான் அரசுகளுக்கிடையிலான பொருளாதாரக் கொள்கை உரையாடல்” (Intergovernmental Economic Policy Dialogue) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளை ஒரு புதிய திசைக்கு இட்டுச் செல்லும் வகையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு முக்கிய மைல்கல்லாக, இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு இடையே பொருளாதாரக் கொள்கை உரையாடல் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Memorandum of […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் வேலையற்றோர் வீதம் – சிக்கலில் உள்ள துறைகள்!

  • February 17, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் வேலையின்மை வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புள்ளிவிபரங்களுக்கு அமைய டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொவிட் காலப்பகுதியோடு ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் வேலை தேட உதவும் வகையில் அரசாங்கம் ‘செயலில் உள்ள நடவடிக்கைகளை’ செயல்படுத்தி வருவதாக  அமைச்சர் ஒருவர் […]

உலகம்

இஸ்ரேலில் இரு பெண் IDF வீரர்களை துரத்திய ஆண்கள் – 28 பேர் கைது!

  • February 17, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் டெல் அவிவின் கிழக்கே உள்ள பினீ பிராக் (Bnei Brak) தெருக்களில்  இரண்டு பெண் ஐ.டி.எஃப் ( IDF) வீரர்களை தீவிர ஆர்த்தடாக்ஸ் ஆண்கள் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் 28 பேரை இஸ்ரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில்  பெரும்பாலானவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இரண்டு சந்தேக நபர்களை  ஐந்து நாட்கள் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் கட்டாய இராணுவ சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  கலவரங்கள் […]

விளையாட்டு

ஆப்கானிஸ்தானின் கனவை பறித்த நியூசிலாந்தின் வெற்றி!

  • February 17, 2026
  • 0 Comments

நியூசிலாந்து New Zealand மற்றும் கனடா Canada ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. T20 உலகக்கிண்ண தொடரில் 31வது லீக் ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் போட்டியிட்டன. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. யுவராஜ் சம்ரா 65 பந்துகளில் 110 ஓட்டங்களை விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு கனடா அணி 173 […]

இலங்கை

அக்குரேகொட இரட்டை படுகொலை விவகாரம் : பணிப்புறக்கணிப்பில் சட்டதரணிகள்!

  • February 17, 2026
  • 0 Comments

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட மிலேச்சத்தனமான சம்பவத்தைக் கண்டித்து, கந்தளாய் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் நேற்று (16)  பாரிய கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மற்றும் கந்தளாய் நீதிமன்றத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், தமது கைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்து, கண்டனப் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த இரட்டைப் படுகொலையை வன்மையாகக் கண்டித்த அவர்கள், குற்றவாளிகளுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]

இலங்கை

பிரித்தானியர் காலத்து ரயில் அனுபவம் : திருகோணமலையை வந்தடைந்த புகையிரதம்!

  • February 17, 2026
  • 0 Comments

வெளிநாட்டு சுற்றுலா பயனிகளுடன் இலங்கையின் புகழ்பெற்ற Viceroy Special என்ற சொகுசு சுற்றுலா புகையிரதம் திருகோணமல புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளது. இது இலங்கையில் தற்போது இயங்கக்கூடிய நிலையில் உள்ள நீராவி இயந்திரம் (Steam Locomotive) ஆகும். சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலான பழமையான வரலாற்றைக் கொண்ட இந்த இயந்திரம், பிரித்தானியர் காலத்து புகையிரதப் பயணத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2024 பெப்ரவரி மாதம் முதல் இந்த புகையிரதம் மீண்டும் தனது சேவையைத் ஆரம்பித்துள்ளது […]

ஐரோப்பா

ஸ்பெயினில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து – 05 பேர் உயிரிழப்பு!

  • February 17, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் கேட்டலோனியாவில் (Catalonia) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பிராந்திய தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஓசோனா (Osona) பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தின் சேமிப்பு அறையில் மேற்படி தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்றும், சிலர் வயது குறைந்தவர்களாக இருக்கலாம் என்று நம்புவதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில உடல்கள் கருகிவிட்டதால் […]

உலகம்

உக்ரைன் போரில் உயிரிழந்த வடகொரிய வீரர்கள் – கிம் வழங்கும் சலுகை!

  • February 17, 2026
  • 0 Comments

ரஷ்ய படை வீரர்களுடன் இணைந்து போராடி உயிர்நீத்த வடகொரிய வீரர்களின் குடும்பங்களுக்கு புதிய வீட்டினை கட்டிக்கொடுக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வீடமைப்பு திட்டத்தின் நிறைவு குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un) நேற்று அறிவித்துள்ளார். கிம் ஜாங் உன் சேப்யோல் தெரு (Saeppyol Street) என்ற பெயரிடப்பட்ட தெரு வழியாக தனது மகளுடன் நடந்து சென்று வீடுகளை பார்வையிடும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபகாலமாக உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் […]

இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டம் குறித்து வடக்கு ஆளுநர் – சுவிஸ் துணை தூதுவர் பேச்சு!

  • February 17, 2026
  • 0 Comments

“டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புக்களை மறுசீரமைப்பதற்கு, மாகாண சபையின் வருடாந்த வரவு – செலவுத் திட்ட நிதிக்கு மேலதிகமாக, மத்திய அரசாங்கத்தால் விசேட நிதி ஒதுக்கப்படவுள்ளது.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தூதுவர் ஒலிவியர் பிராஸ் (Olivier Praz) தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரை இன்று   (17.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். டித்வா பேரிடரால் வடக்கில் […]

இலங்கை செய்தி

15 நாட்களுக்குள் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

  • February 17, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 15 நாட்களுக்குள் மாத்திரம் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 339 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். பெப்ரவரி 1 முதல் 15 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 26 ஆயிரத்து 96 பேரும், பிரிட்டனில் இருந்து 17 ஆயிரத்து 807 பேரும், ரஷ்யாவில் இருந்து 12 ஆயிரத்து 607 பேரும் இலங்கைக்கு சுற்றுலா […]

error: Content is protected !!