இலங்கை செய்தி

இலங்கையின் மீட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் – IMF முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு

  • February 17, 2026
  • 0 Comments

அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் அவருக்கும் இடையே இன்று (17) சந்திப்பு இடம்பெற்தையடுத்து. கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தமது எக்ஸ் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரது பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “இலங்கை வெகுதூரம் கடந்து வந்துள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருகிறது. அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி இந்தியா பயணமானார்

  • February 17, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கமைய, 2026 செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பிற்பகல் இந்தியா பயணமானார். செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாடு புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் […]

உலகம் செய்தி

பிரதமராக பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்

  • February 17, 2026
  • 0 Comments

பங்களாதேஷின் தேசியவாத கட்சியை சேர்ந்த தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றுள்ளார். அத்துடன் அவருடைய புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்கின்றது. பங்களாதேஷில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாணவர் போராட்டத்தின் தொடர்ச்சியாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து பங்களாதேஷில், பேராசிரியர் மொஹமட் யூனூஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இதன்பின்னர், பெப்ரவரி 12 இல் பொது தேர்தல் நடத்தப்படும் […]

இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து பிரிட்டன் துணை பிரதமர் மகிழ்ச்சி!

  • February 17, 2026
  • 0 Comments

  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மி (David Lammy) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் Anura Kumara Dissanayake பேச்சு நடத்தினார். ஜனாதிபதி அலுவகத்தில் இன்று (17) முற்பகல் மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் தற்போதைய நிலையில் விஜயம் மேற்கொண்டமைக்காகப் பிரிட்டன் துணைப் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போது பிரிட்டன் வழங்கிய ஒத்துழைப்புகளைப் பாராட்டினார். குறிப்பாக, இலங்கையின் ஆடை […]

செய்தி

உருகும் பனியால் வெளிவரும் 5000 ஆண்டு பழைமையான பாக்டீரியா : எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

  • February 17, 2026
  • 0 Comments

ருமேனியாவில் உள்ள ஒரு பழங்கால பனிக்கட்டி குகையில் இருந்து 5,000 ஆண்டுகள் பழமையான பாக்டீரியா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பழங்கால பாக்டீரியா திரிபு 10 வெவ்வேறு நவீன நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்ப்பைக் காட்டியுள்ளது. குறிப்பாக கடுமையான தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கும் எதிர்ப்பை காட்டியுள்ளது. இந்நிலையில் உருகும் பனியால் இந்த பாக்டீரியாக்கள் வெளியேற்றப்பட்டால், அவற்றின் எதிர்ப்பு மரபணுக்கள் வேகமாக  பரவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டிபயாடிக் எதிர்ப்பின் உலகளாவிய சவாலை அதிகப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் அச்சம் […]

இலங்கை செய்தி

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த சாசனம்: முதல் தெற்காசிய நாடாக இணைகிறது இலங்கை!

  • February 17, 2026
  • 0 Comments

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை இன்று வெளிப்படுத்தியது. கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து இவ்வாறு விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரிட்டன் துணை பிரதமர் டேவிட் லம்மி கலந்துகொண்டார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜினால் இதற்கான உத்தியோகபூர்வ விருப்பக் கடிதம் கையளிக்கப்பட்டது. இலங்கை நீண்டகாலமாக […]

இலங்கை செய்தி

வவுனியா மாணவி படுகொலை சம்பவம் – 10 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் குடும்பம்

  • February 17, 2026
  • 0 Comments

வவுனியாவில் 16 வயது மாணவியான ஹரிஸ்ணவி படுகொலை செய்யப்பட்டு பத்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லையென உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த போது அந்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். எனினும் ஒவ்வொரு வழக்குகளும் தவணை இடப்பட்டு கடந்து செல்வதாக தெரிவித்த உறவினர்கள் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு இதுவரை தண்டனை […]

அரசியல் இலங்கை செய்தி

” யாழ்.மக்களாலேயே ரணில் தோற்றார்” – ஐ.தே.க. கவலை

  • February 17, 2026
  • 0 Comments

“2005 ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு மக்கள் வாக்களிப்பை புறக்கணிக்காது இருந்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார்.” – என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே Ranil Wickremesinghe வெற்றி பெற்றிருப்பார். யாழ்ப்பாணத்தில் தேர்தலை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் அவர் இலகுவில் வென்றிருப்பார். அந்த தேர்தலில் தோற்ற பின்னரே ரணிலின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. ரணில் விக்கிரமசிங்க என்பவர் […]

இலங்கை செய்தி

கம்பளையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

  • February 17, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டு டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் அவரது குழுவினர் நேற்று பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தனர். இந்நிலையில் அவர்கள் இன்றைய தினம் கொழும்பு திரும்பியதும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளனர். இந்த சந்திப்புகளின் போது, ​ இலங்கையின் […]

இலங்கை செய்தி

பொருளாதார உறவை வலுப்படுத்த ஜப்பான், இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து!

  • February 17, 2026
  • 0 Comments

“இலங்கை – ஜப்பான் அரசுகளுக்கிடையிலான பொருளாதாரக் கொள்கை உரையாடல்” (Intergovernmental Economic Policy Dialogue) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளை ஒரு புதிய திசைக்கு இட்டுச் செல்லும் வகையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு முக்கிய மைல்கல்லாக, இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு இடையே பொருளாதாரக் கொள்கை உரையாடல் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Memorandum of […]

error: Content is protected !!