விளையாட்டு

நேபாளம் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றியிலக்கு

  • February 17, 2026
  • 0 Comments

நேபாளம் அணி 171 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடவுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய (17) மூன்றாவது போட்டியில் ஸ்கொட்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நேபாளம் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஸ்கொட்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மிட்செல் ஜோன்ஸ் 71 […]

உலகம்

இந்தியா – பிரான்ஸ் புதுமை ஆண்டு தொடக்கம்

  • February 17, 2026
  • 0 Comments

இந்தியா சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், மும்பையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மும்பையில் உள்ள லோக் பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பிரான்ஸ் தூதுக்குழுவினரும் இந்திய தரப்பில் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பின்னர், கர்நாடகாவின் வேமகலில் டாடா ஏர்பஸ் தொழிற்சாலையில் H125 என்ற எடை குறைந்த ஹெலிகொப்டர் தயாரிப்பை கூட்டாக தொடங்கிவைத்தனர். பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதன்போது இந்தியா – பிரான்ஸ் புதுமை ஆண்டை நாங்கள் தொடங்கியுள்ளோம் […]

ஐரோப்பா

பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு – கன்சர்வேடிவ் கட்சிக்கு கடுமையான பாதிப்பு!

  • February 17, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலை ஒத்திவைப்பது தொழிற்கட்சியை விட கன்சர்வேடிவ் கட்சியை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கருத்துக்கணிப்பு நிபுணர் சர் ஜான் கர்டிஸ் (Sir John Curtice) இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கன்சர்வேடிவ் கட்டுப்பாட்டில் உள்ள கவுன்சில்களில் பல நைகல் ஃபராஜின் சீர்திருத்த பிரித்தானிய கட்சிக்கு ஆதரவு கரம் நீட்ட வாய்ப்புள்ளதாகவும், இதனால் கன்சர்வேடிவ்  கட்சி பாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம், […]

இலங்கை செய்தி

பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம்

  • February 17, 2026
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிபந்தனைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2474/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, விண்ணப்பதாரிகள் தமது பட்டத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதி 2026 மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் […]

இலங்கை செய்தி

ஓய்வூதியம் ரத்து: சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

  • February 17, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் (17) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் பதிவாகின. இதனைத் தொடர்ந்து குழு நிலையில் நாடாளுமன்றஉறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோர் சட்டமூலத்தின் மூன்றாவது பிரிவுக்கு திருத்தங்களை முன்வைத்தனர். அவற்றை ஏற்றுக் […]

இலங்கை செய்தி

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – மேலும் ஒருவர் கைது

  • February 17, 2026
  • 0 Comments

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று (17) பிற்பகல் பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கொண்டு சென்றுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட […]

உலகம்

வெப்பநிலை உயர்வு – கிரீன்லாந்தில் அழிவடைந்து வரும் இன்யூட் மக்களின் கலாச்சாரம்!

  • February 17, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நாய் சவாாி தற்போது கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது ஆர்டிக் பகுதிகளில் பனிகட்டிகள் உருகி வருவதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையானது  ஆயிரம் ஆண்டுகள் பழமையான இன்யூட் நடைமுறையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை நிரந்தர உறைபனி உருகுவதற்கும் உலகளாவிய கடல் மட்ட உயர்வுக்கும் கணிசமாக பங்களிக்கிறது. அத்துடன் முக்கியமான கனிம படிவுகளை வெளிப்படுத்தக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்க்டிக் […]

இலங்கை செய்தி

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து: சட்டமூலம் நிறைவேற்றம்!

  • February 17, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (17) நிறைவேற்றப்பட்டது. மேற்படி சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல எனவும், அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – கடும் வாகன நெரிசல்

  • February 17, 2026
  • 0 Comments

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (17) எதிர்ப்பு பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல்கலைக்கழகத்திற்கு அருகில் சில மணிநேரம் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தன்னிச்சையான முறையில் பல்கலைக்கழக மாணவர்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக, கொழும்பு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் ஹிமிசர தெனுவன் கூறியுள்ளார். பல்கலைக்கழகங்களுக்குள் மாணவர்கள் ஏதேனும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வதாயின், அதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஒழுங்குபடுத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் […]

ஐரோப்பா

ஆயுத கடத்தல் குற்றச்சாட்டு – அமெரிக்க பிரஜைக்கு சிறை தண்டனை விதித்த ரஷ்யா!

  • February 17, 2026
  • 0 Comments

மொஸ்கோ விமான நிலையத்தில் இருந்து துப்பாக்கிகளை கடத்த முயன்றதாக கூறப்படும் அமெரிக்க பிரஜை ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கலாஷ்னிகோவ் (Kalashnikov) ஆயுதங்களை சேகரிப்பவரான அந்த நபர், மொஸ்கோவின் வுனுகோவோ (Vnukovo) விமான நிலையத்தில் இருந்து குறித்த ஆயுதத்தை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அடையாளம் வெளியிடப்படாத அந்த நபர், ஆயுதக் கடத்தல் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து […]

error: Content is protected !!