முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலையுடன் பிள்ளையானிற்கு தொடர்பு: வெளியான பகீர் தகவல்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் மட்டக்களப்பில் தற்போது இராஜாங்க அமைச்சராகயிருப்பவருக்கும் தொடர்பிருந்தது என மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் காணி ஆணையாளர் நே.விமல்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,“கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவராக தான் இருந்தபோதே முன்னாள் உபவேந்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அக்காலத்தில், தற்போது மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சராகயிருப்பவர் தொடர்புபட்டது குறித்து பல்கலைக்கழகத்தில் பேசப்பட்டது.சட்டத்திற்கு முரணான வகையில் காணி கோரி […]













