பசுமைப்புரட்சியில் இணையுமாறு எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்பு
பசுமைப்புரட்சியில் இணைந்துகொள்ளுமாறு நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரியும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்புவிடுத்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையின் தூய சக்திவலு மாநாடு – 2023 இல் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார். மேலும் உலகளாவிய ரீதியில் அபிவிருத்தியடைந்துவரும் இருபெரும் நாடுகளான சீனாவும் இந்தியாவுமே பசுமைப்புரட்சிக்குத் தலைமைதாங்குவதாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை பசுமைப்பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான பல்வேறு வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் […]













