இலங்கை செய்தி

இலங்கையில் மின் கட்டண குறைவு தொடர்பில் வெளியான தகவல்!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் டீசல் உட்பட எரிபொருள் விலை குறைவினால் 30 அலகுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் மின் பாவனையாளர்களுக்கு ஒரு மின்சார அலகை 12 ரூபாவிற்கு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க இதனை தெரிவித்தார். மேலும், 31 முதல் 60 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 31வது யூனிட் முதல் ஒரு யூனிட் மின்சாரத்திற்காக வசூலிக்கப்படும் 37 ரூபாயை 15 ரூபாயாக குறைக்கலாம் என்றார். எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் பின்னர் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணில் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

  • April 12, 2023
  • 0 Comments

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அநுராதபுரத்திலுள்ள விமனாப்டை முகாமில் முப்படையினருக்கான சிறப்புரை ஆற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சர்களுக்கு இது தொடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதெனவும், இந்த நடவடிக்கைகளுக்கு காவல்துறையினர் உதவ வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தான் அதிபராக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கபோவதில்லை என அவர் தெரிவித்தார்.  

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது நிறுத்தப்படவில்லை – சியம்பலாபிட்டிய

  • April 12, 2023
  • 0 Comments

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது நிறுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார். தெஹியோவிட்டவில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முறையற்ற முறையில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதை தடுப்பது போன்ற பல விடயங்களில் அமைச்சு செயற்பட்டு வருவதாக தெரிவித்தார். ஏற்கனவே வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், மேலும் விஞ்ஞான முறையின் கீழ் உரிமம் வழங்குவதற்கான அறிக்கை அடுத்தவாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை செய்தி

குப்பி விளக்கால் ஆறு மாத குழந்தை பலி – முல்லைத்தீவில் சம்பவம்

  • April 12, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியில் குப்பி விளக்கு கவிழ்ந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 மாத குழந்தை எரிந்து ஆபத்தான நிலையில் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இரவு தேராவில் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த போது குப்பி விளக்கு தீப்பிடித்து எரிந்த நிலையில் சிசுவின் உடல் எரிந்து ஆபத்தான நிலையில் தருமபுரம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிசுவை மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு […]

இலங்கை செய்தி

இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவராக சனத் ஜயசூரிய நியமனம்

  • April 12, 2023
  • 0 Comments

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட்டுக்கான (SLC) தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார். இதன்படி, குறித்த குழுவின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பர்வீஸ் மஹரூப், அசந்த டி மெல், சரித் சேனாநாயக்க மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை செய்தி

காதல் கோரிக்கையை ஏற்க மறுத்த மாணவி மீது வாள்வெட்டு

  • April 12, 2023
  • 0 Comments

லோயா பிரதேசத்தில் உள்ள ஞாயிறு பாடசாலை ஒன்றில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் இயங்கி வரும் தம்ம பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இன்று (02) காலை 7.45 மணியளவில் விகாரை வளாகத்தினுள் நுழைந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் மாணவியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் கல்ஓயா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், […]

இலங்கை செய்தி

கடும் வெப்பமான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

கடும் வெப்பமான காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை இன்றைய நாட்களில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தற்போதைய போன்ற வெப்பமான காலநிமையை கவனத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் செயற்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை செய்தி

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி சிறுபான்மை மக்களின் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சி!

  • April 12, 2023
  • 0 Comments

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது பதற்றநிலை நிலவியுள்ளது.இச் சம்பவம் நேற்றைய தினம் (01) பொன்மாலைக் குடா பகுதியில் இ டம்பெற்றுள்ளது. குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாது காவலுடன் சென்றிருந்த வேலையில் பொது மக்களை மெய்பாதுகாவலன் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளார்.   புல்மோட்டை அரிசி மலை விகாரையினை சேர்ந்த பௌத்த மதகுருவே […]

இலங்கை செய்தி

பேக்கரி பொருட்களின் விலையும் குறையுமா?

  • April 12, 2023
  • 0 Comments

பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 230 ரூபாயாக ஒரு கிலோ கோதுமை மாவின் விலை தற்போது 210 ரூபாயாக குறைந்துள்ள போதிலும் பேக்கரி தொடர்பான உணவுப் பொருட்களின் விலைகளில் குறையவில்லை. இந்நிலையிலேயே விலை குறித்து அடுத்த வாரமளவில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய தயாராகும் அரசு!

  • April 12, 2023
  • 0 Comments

இரண்டு மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய அரசு தயாராகி வருவதாக சுகாதார சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். அதிக விலைக்கு மருந்துகள் வாங்குவது தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். 7000 ரூபாவுக்கு விற்கப்படும் கான்சிக்ளோவியன் என்ற வைரஸ் தடுப்பு மருந்தை 77000 ரூபாவுக்கும்,  200 ரூபா பெறுமதியான லினோசோலிட் என்ற ஆன்டிபயாடிக் மருந்தை 2200 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முயற்சி நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயல்களால் நாடு தேவையற்ற […]

error: Content is protected !!