சிறுபடகுகளில் பிரித்தானியா வருவோருக்கு காத்திருக்கும் தண்டனை… அமைச்சர் சுவெல்லா வெளிப்படை
சிறுபடகுகளில் இனி பிரித்தானியா வந்து சேரும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சிறைவாசம் காத்திருகிறது என உள்விவகார அமைச்சர் சுவெல்லா பிரேவர்மேன் அதிரடியாக அறிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது சட்டபூர்வமானதா என்பதை விளக்கும் போது அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. சிறுபடகுகளில் இனி பிரித்தானியாவுக்குள் நுழைந்தால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு ஜாமீன் அல்லது நீதித்துறை மறுஆய்வுக்கான வாய்ப்பு அளிக்கப்படுவது இல்லை என்றார். சட்டவிரோதமான இந்த சிறுபடகு பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், ஒடுக்குமுறைகளில் இருந்து தப்பிச் செல்லும் மக்களுக்கு […]













