மியான்மரில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி
மியான்மரில் கிளர்ச்சியாளர்களின் திட்டத்திற்கு எதிராக ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 16 குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 6 மணியளவில் வடமேற்கு சகாயிங் பகுதியில் உள்ள பாசிகி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்புப் படை என்ற கிளர்ச்சிக் குழுவின் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்களை குறிவைத்து […]












