மது போதையில் மேடையில் படுத்து உறங்கிய மணமகன்: மணமகள் எடுத்த அதிரடி முடிவு!(வீடியோ)
அசாமில் திருமண மேடையின் மேல் குடிபோதையில் மணமகன் படுத்து உறங்கியதால், மணமகள் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார். திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்த மணமேடைக்கு மணமகன் குடிபோதையில் வந்ததால், மணமகள் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மணமகன் பிரசென்ஜித் ஹாலோய்-ஆல் நிலையாக உட்கார கூட முடியாமல் மணமேடையிலேயே படுத்து உறங்கியதால் மணமகளின் வீட்டார் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இது தொடர்பாக மணமகளின் உறவினர் தெரிவித்துள்ள தகவலில், திருமணம் சிறப்பாக நடைபெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம், […]













