இலங்கை செய்தி

மலையக மக்களுக்காக ஜி.எஸ்.பி. வரி ஆயுதத்தை கையிலெடுங்கள்: பிரான்ஸ் தூதுவரிடம் மனோ கோரிக்கை!

  • January 20, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பர்டுக்கும் Remy Lambert , தமிழ் முற்போக்கு கூட்டணியின் Tamil Progressive Alliance (TPA பிரதிநிதிகளுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் Mano Ganesan இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போது சமகால அரசியல், பொருளாதார விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களான பேராசிரியர் விஜயசந்திரன், பாரத் அருள்சாமி, மற்றும் புஷ்பநாதன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். மேற்படி சந்திப்பு தொடர்பில் […]

இலங்கை

வாகன இறக்குமதி – எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக இலாபம் ஈட்டிய அரசாங்கம்!

  • January 20, 2026
  • 0 Comments

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாய் வருமானத்தை எதிர்பார்த்ததாகவும், ஆனால் 904 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியதாகவும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் நிஷாந்த ஜெயவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சுங்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை 90 நாட்களுக்குள் விடுவிக்க 3% வரி சேர்க்கப்படும். மேலும் இது 5 மாத காலத்திற்குள் சுமார் 45% ஆக அதிகரிக்கும், இதனால் நுகர்வோர் அந்த கூடுதல் தொகையை ஏற்க வேண்டியிருப்பதாக  ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார். […]

இலங்கை செய்தி

இந்து சமுத்திர கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்க திட்டம்: இலங்கை ஒப்புதல்!

  • January 20, 2026
  • 0 Comments

இந்து சமுத்திர கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்குரிய யோசனையை கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேர் அமைச்சரவையில் முன்வைத்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்றது. இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு, “ சூரை மீன் Tuna fish மீன்பிடித் […]

உலகம் ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புதிய நெருக்கடி

  • January 20, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகப் புதிய பொருளாதாரப் போரை அறிவித்துள்ளார். காசா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் தனது ‘அமைதிச் சபையில்’ (Board of Peace) இணைய மறுத்ததற்காக, பிரெஞ்சு மதுபானங்கள் மற்றும் ஷாம்பெயின் (wines and champagne) மீது 200 சதவீத வரி விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் விரைவில் பதவியில் இருந்து விலகப்போகிறார் என விமர்சித்த ட்ரம்ப், இந்த வரி விதிப்பின் […]

ஆஸ்திரேலியா செய்தி

பொன்டி கடற்கரைத் தாக்குதல் ; துப்பாக்கிக் கட்டுப்பாட்டுக்கு அவுஸ்திரேலியா அங்கீகாரம்

  • January 20, 2026
  • 0 Comments

கடந்த டிசம்பர் 14-ஆம் திகதி பொன்டி (Bondi) கடற்கரையில் 15 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டமூலத்தை அவுஸ்திரேலியாவின் கீழ்சபை நிறைவேற்றியுள்ளது. 96-க்கு 45 என்ற வாக்கு அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம், நாடு முழுவதும் தேசிய அளவிலான துப்பாக்கி மீட்புத் திட்டம் (Gun Buyback) அமுல்படுத்தப்படவுள்ளது. அவுஸ்திரேலியாவில் தற்போது பதிவு செய்யப்பட்ட 40 இலட்சம் துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அவற்றைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதனுடன் இணைந்ததாக, யூத […]

அரசியல் இலங்கை செய்தி

பௌத்த துறவிகளை அவமதிக்கும் வகையில் செயல்படாதீர்: NPP அரசுக்கு எச்சரிக்கை!

  • January 20, 2026
  • 0 Comments

பௌத்த துறவிகளை அவமதிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் செயல்படக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கமென்பது இந்நாட்டின் உரிமையாளர் அல்லர். இந்நாட்டை நிர்வாகிப்பதற்குரிய பொறுப்பு மாத்திரமே அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்நாட்டுக்குரிய அடையாளம் […]

ஐரோப்பா செய்தி

அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து சமூக ஊடகக் கட்டுப்பாட்டில் களமிறங்கும் பிரித்தானியா

  • January 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து அந்நாட்டு அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சமூக ஊடகத் தளங்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துமாறு 60-க்கும் மேற்பட்ட தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ‘குழந்தைகள் நல்வாழ்வு மற்றும் பாடசாலைகள் சட்டமூலத்தில்’ இதற்கான திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அடுத்த ஓராண்டுக்குள் 16 வயதுக்குட்பட்டவர்கள் தமது தளங்களைப் […]

உலகம்

கிரீன்லாந்தை கைப்பற்ற பிரித்தானியாவின் முட்டாள் தனமான முடிவுகளே காரணம் – சர்ச்சையை கிளப்பும் ட்ரம்ப்!

  • January 20, 2026
  • 0 Comments

சாகோஸ் (Chagos) தீவுகளில் உள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) தீவை மொரீஷியஸுக்கு வழங்கும் இங்கிலாந்து திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். கிரீன்லாந்தை கையகப்படுத்த அமெரிக்கா முனைப்பு காட்டுவதற்கு பிரித்தானியாவின் மேற்படி நடவடிக்கையும் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் ட்ரூத் சமூக ஊடக தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அதிர்ச்சியூட்டும் விதமாக, நமது “புத்திசாலித்தனமான” நேட்டோ நட்பு நாடான ஐக்கிய இராச்சியம், தற்போது ஒரு முக்கியமான அமெரிக்க இராணுவத் தளத்தின் தளமான […]

உலகம் செய்தி

கிரீன்லாந்தில் படைகளைக் குவிக்கிறது டென்மார்க்: ஆர்க்டிக் பிராந்தியத்தில் போர் மேகங்கள்

  • January 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கடுமையாக அச்சுறுத்தலை தொடர்ந்து டென்மார்க் கிரீன்லாந்திற்கு கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது. நேற்று மாலை மேற்கு கிரீன்லாந்தில் உள்ள காங்கர்லுசுவாக்கில் (Kangerlussuaq) டேனிஷ் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைவர் பீட்டர் போய்சன் (Peter Boyesen) உறுதிப்படுத்தியுள்ளார். டேனிஷ் துருப்புக்கள் ஆர்க்டிக் பிரதேசத்தில் தரையிறங்கியதாகவும், ஒபரேஷன் ஆர்க்டிக் எண்டியூரன்ஸ் (Operation Arctic Endurance) என அழைக்கப்படும் பன்னாட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க முன்னர் அனுப்பப்பட்ட சுமார் 60 பேருடன் இணைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்தில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்தை கட்டுப்படுத்த […]

இலங்கை

வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தால் 640க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

  • January 20, 2026
  • 0 Comments

இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் 640க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நுகேகொடையில் உள்ள கங்கோடவில நீதிமன்றத்திற்கு அருகில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இன்று அமைதியான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவர்களிடம் இருந்து ரூ. 860 மில்லியன் முதல் 900 மில்லியன் வரை மோசடி செய்துள்ளதாகவும் இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் […]

error: Content is protected !!