இந்தியா தமிழ்நாடு

விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!

  • January 22, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்துக்கு TVK விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது . அதன் அடிப்படையில், அக்கட்சிக்கு விசில் சின்னம் […]

இலங்கை செய்தி

சுகாதாரத்துறை ஸ்தம்பிக்கும் சாத்தியம்: வைத்தியர்கள் போராட்டத்தில் குதிப்பு!

  • January 22, 2026
  • 0 Comments

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் நாளை (23) காலை 8 மணி முதல் 48 மணிநேரம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் GMOA அறிவித்துள்ளது. இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பன தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதாலேயே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், சிறார் வைத்தியசாலைகள், புற்றுநோயாளர் வைத்தியசாலைகளில் இப்போராட்டம் இடம்பெறாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.  

இலங்கை

கிழக்கில் நிறைவுக்கு வந்த போராட்டம் : நோயாளர் பராமரிப்பு சேவைகள் வழமைக்கு!!

  • January 22, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்று முதல் நிறைவுக்கு வருவதாக  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான கடிதத்தை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (22) நண்பகல் 2.00 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் […]

இலங்கை செய்தி

கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது ஓமான் கடற்படைக் கப்பல் ‘அல் சீப்’

  • January 22, 2026
  • 0 Comments

ஓமான் ரோயல் கடற்படைக்குச் சொந்தமான ‘அல் சீப்’ (AL SEEB) கப்பல், எரிபொருள் மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலுக்கு, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமையச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். 75 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலுக்கு லெப்டினன்ட் கமாண்டர் ஹமத் பின் முகமது அல்டர்மகி (Lieutenant Commander Hamad Bin Mohammed Aldarmaki) தலைமை தாங்குகிறார். இந்த விஜயமானது இலங்கை […]

உலகம் செய்தி

உலக சுகாதார அமைப்பிலிருந்து இன்று வெளியேறுகிறது அமெரிக்கா

  • January 22, 2026
  • 0 Comments

அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனத்திலிருந்து இன்று உத்தியோகபூர்வமாக விலக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் உலகளாவிய சுகாதாரத்துக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025 ஆம் ஆண்டு பதவியேற்ற முதல் நாளிலேயே நிர்வாக உத்தரவு மூலம் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அமெரிக்க சட்டப்படி, விலகுவதற்கு முன் ஒரு ஆண்டு முன் அறிவிப்பு வழங்கி, நிலுவையில் […]

ஐரோப்பா

ட்ரம்பின் அமைதி வாரிய ஒப்பந்தத்தில் பிரித்தானியா இணையாது!

  • January 22, 2026
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்பின் அமைதி வாரிய ஒப்பந்தத்தில் பிரித்தானியா இணையாது என வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமெரிக்க ஜனாதிபதியின்  மத்திய கிழக்கிற்கான 20 அம்ச அமைதித் திட்டத்தை இங்கிலாந்து கடுமையாக ஆதரிக்கிறது. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் சட்டரீதியான தாக்கங்கள் மற்றும் பரந்த பிரச்சினைகள் காரணமாக இங்கிலாந்து இன்று கையெழுத்திடாது எனக் கூறியுள்ளார். இதேவேளை  உக்ரைனில் அமைதிக்கான அர்ப்பணிப்பு இல்லாதது தொடர்பிலும்,  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் […]

ஐரோப்பா

மின் கட்டமைப்பை குறிவைத்து தாக்கும் ரஷ்யா : குளிரில் தவிக்கும் மக்கள்!

  • January 22, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலால் உக்ரைனின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் கீவில் சுமார் 3,000 அடுக்குமாடி கட்டிடங்கள் வெப்பமாக்கப்படாமல் உள்ளதாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) தெரிவித்துள்ளார். இதற்கிடையில், உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff) இன்று மொஸ்கோவிற்கு பயணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்யா “பால்டிக் கடலின் கடலுக்கடியில் உள்ள உள்கட்டமைப்பை சேதப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக […]

செய்தி பொழுதுபோக்கு

பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் மகன் காலமானார்

  • January 22, 2026
  • 0 Comments

இந்தியத் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். இச்சம்பவம் இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணாவுக்கு இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.   உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி கிருஷ்ணா தெலுங்குத் திரையுலகில் நடிகராகவும் அறியப்பட்டவர். குறிப்பாக ‘விநாயகடு’, ‘100% லவ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி; ஒருவர் படுகாயம்

  • January 22, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் மத்திய மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ‘லேக் காஜெல்லிகோ’ (Lake Cargelligo) எனும் சிறுநகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா நேரப்படி இன்று மாலை சுமார் 4:40 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆடவர் உயிரிழந்துள்ளதை நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

உலகம்

தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு 23 ஆண்டுகள் சிறை!

  • January 22, 2026
  • 0 Comments

தென் கொரியாவின்  முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு ( Han Tak-soo) 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரிய நீதிமன்றம் நேற்று (21) இவ்வாறு தீர்ப்பளித்தது. முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோல் இராணுவச் சட்டத்தை அறிவிக்க உதவியதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது. அமைச்சரவை குழுக்கள் மூலம் இராணுவச் சட்டத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு உதவியதற்காகவும், இராணுவச் சட்ட ஆவணங்களை போலியாக உருவாக்கி அழித்ததற்காகவும் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது. இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி […]

error: Content is protected !!