உலகம் செய்தி

ட்ரம்ப்– செலென்ஸ்கி சந்திப்பு: உக்ரைன் போர் விரைவில் நிறைவுக்கு

  • January 22, 2026
  • 0 Comments

உக்ரைனில் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் (Witkoff) வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை டாவோஸில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை ட்ரம்ப் சந்திக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ செல்லும் முன் கருத்து தெரிவித்த விட்காஃப், “இந்த பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஒரு கட்டத்திற்கு நாங்கள் வந்துள்ளோம்” என்று […]

இலங்கை செய்தி

இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்த சீனா நேசக்கரம்!

  • January 22, 2026
  • 0 Comments

இலங்கையில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்குரிய ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது. சீன – இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறும். மேற்படி ஒப்பந்தத்தின் பிகாரம் இலங்கையின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. சீனாவும் இலங்கையும் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டமாக, நாட்டின் […]

இலங்கை செய்தி

அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • January 22, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (ஜனவரி 22, 2026) அறிவித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான மசகு எண்ணெய்யை, அதிக விலையில் ‘ஸ்பொட் டெண்டர்கள்’ (Spot Tenders) […]

இலங்கை செய்தி

சுற்றுலா பயணத்தை ஊக்குவிக்கும் இலங்கையின் புதிய விசா அறிவிப்பு

  • January 22, 2026
  • 0 Comments

மாலத்தீவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம், சுற்றுலா அல்லது வருகை நோக்கங்களுக்காக இலங்கைக்கு செல்லும் மாலத்தீவு குடிமக்களுக்கு 90 நாட்கள் செல்லுபடியாகும் வருகை விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அறிவிப்பின் படி, மாலத்தீவு நாட்டவர்கள் இலங்கைக்கு பயணம் செய்யும் முன் மின்னணு பயண அனுமதி (ETA) பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்த விசா விலக்கு ஏற்பாடு, பயணிகளை எளிதாகப் பயணிக்க உதவும் என்றும், இலங்கை–மாலத்தீவு நாடுகளுக்கிடையிலான மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் செய்தி

உக்ரைன் போர் தீர்வு விரைவில் – அமைதிக்கான சபை குறித்து ட்ரம்ப் முக்கிய அறிவிப்பு

  • January 22, 2026
  • 0 Comments

உக்ரைன் போர் தொடர்பில் மிக விரைவில் தீர்வு கிடைக்கும் என  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற தனது “அமைதிக்கான‌ சபை” தொடர்பான கையெழுத்து நிகழ்வில், ட்ரம்ப் பல உலகத் தலைவர்களுடன் இணைந்து கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ட்ரம்ப், ” ஒரு வருடம் முன்பு உலகம் தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்தது, ஆனால் பலருக்கு அது தெரியாது” என கூறினார். இதுவரை எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன்.” […]

உலகம்

காசாவுக்கான அமைதி வாரிய திட்டம் – 35 நாடுகள் இணைவு : ஐரோப்பிய நாடுகள் மறுப்பு!

  • January 22, 2026
  • 0 Comments

காசாவுக்கான “அமைதி வாரியத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். இதற்கான கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கை டாவோஸில் (Davos) இடம்பெற்றுள்ளது. இந்த வாரியத்தில் சேர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் (Putin) மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ( Benjamin Netanyahu) ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளன.  புடினின் ஈடுபாடு குறித்த கவலைகளை இங்கிலாந்து காரணம் காட்டியுள்ளது. சவுதி […]

இந்தியா செய்தி

தாய்லாந்து எல்லையில் அடிமைகளாக சிக்கியுள்ள 16 இந்தியர்கள் ; மீட்கக் கோரி ஒவைசி வேண்டுகோள்

  • January 22, 2026
  • 0 Comments

தாய்லாந்து எல்லையில் அடிமைகளாகச் சிக்கியுள்ள 16 இந்தியர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஹைதராபாத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 16 இந்தியர்கள், தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு, மியான்மர் – தாய்லாந்து எல்லைப் பகுதியில் மர்ம நபர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கு அவர்கள் நாள்தோறும் 18 […]

உலகம்

நியூசிலாந்தில் நிலச்சரிவு – 02 பேர் பலி, பலர் மாயம்!

  • January 22, 2026
  • 0 Comments

நியூசிலாந்தில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால குழுவினர் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முதல் நிலச்சரிவு இன்று அதிகாலை 4.50 மணியளவில் நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள வெல்கம் பே  (Welcome Bay) என்ற இடத்தில் பதிவானது. மவுண்ட் மவுங்கானுய்  (Mount Maunganui) அடிவாரத்தில் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரை விடுமுறை பூங்கா அமைந்துள்ளதால் பலர் […]

இலங்கை செய்தி

டிட்வா புயலால் சேதமடைந்த பாடசாலைகளைச் சீரமைக்கத் துருக்கி அரசாங்கம் ஆதரவு

  • January 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கான துருக்கி தூதுவர் கலாநிதி செமி லுட்ஃபூ டர்குட் (Dr. Semih Lutfu Turgut) மற்றும் அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அண்மையில்  பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. ‘டிட்வா’ புயலால் சேதமடைந்த பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு துருக்கி அரசாங்கத்தின் உதவியை அமைச்சர் கோரினார். இதற்கு சாதகமாக பதிலளித்த தூதுவர், பாதிக்கப்பட்ட பாடசாலைகளை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக தெரிவித்தார். குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு தீர்வு […]

உலகம்

நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் வீடுகளில் சோதனை செய்ய உரிமைக் கோரும் குடியேற்ற முகவர்கள்!

  • January 22, 2026
  • 0 Comments

நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் தனியார் வீடுகளில் சோதனை செய்யும் அதிகாரத்தை அமெரிக்க  ICC  குடியேற்ற முகவர்கள் கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நீண்டகாலமாக நிறுவப்பட்ட வழிகாட்டுதலிலிருந்து விலகி அவர்கள் சுயாதீனமாக செயற்பட வழிவகுப்பதை காட்டுகிறது. ICE செயல் இயக்குனர் டாட் லியோன்ஸ் (Todd Lyons)  பிறப்பித்த புதிய உத்தரவு, முகவர்கள் வீடுகளுக்குள் பலவந்தமாக நுழைந்து தனிநபர்களை கைது செய்ய அனுமதிக்கிறது. இந்தக் கொள்கை நான்காவது திருத்தப் பாதுகாப்புகளுடன் நேரடியாக முரண்படுகிறது மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு வழங்கப்பட்ட பல […]

error: Content is protected !!