இலங்கை

திருகோணமலையில் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த சிப்பாய்!

  • January 22, 2026
  • 0 Comments

திருகோணமலை கோமரங்கடவல -அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (22) இடம் பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் குறித்த சிறுவர்களை அழைத்துச் சென்று கசிப்பு அருந்த கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த மாணவர்களை கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் மேலதிக சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. […]

இலங்கை செய்தி

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 100 நவீன மின்சார பேருந்துகள்

  • January 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சார பேருந்துகளை விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரை இன்று (22) சந்தித்து ஆசி பெற்ற போதே சீனத் தூதுவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் இராணுவ முகாமிற்கு மாற்றம்!

  • January 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை இராணுவ முகாம்களுக்கு மாற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 27 புகலிடக் கோரிக்கையாளர்கள் கிழக்கு சசெக்ஸில் (Sussex) உள்ள க்ரோபரோ (Crowborough) இராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அலுவலகம் 500க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் வரை மூன்று மாதங்களுக்கு முகாம்களில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் 27 பேர் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood), […]

விளையாட்டு

இந்தியாவில் ஆட மறுக்கும் வங்கப் புலிகள்! ஐ.சி.சியும் விடாப்பிடி!!

  • January 22, 2026
  • 0 Comments

இந்தியாவில் விளையாட முடியாது என பங்களாதேஷ் Bangladesh Team அணி மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஐ.சி.சி. டி20 ICC T-20 உலகக் கிண்ண தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகின்றது. இலங்கை மற்றும் இந்தியாவில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் தமது அணி இந்தியாவில் விளையாடாது எனவும், அணி பங்கேற்கும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறும் பங்களாதேஷ் அணி ஐ.சி.சியிடம் கோரிக்கை விடுத்தது. எனினும், இந்த கோரிக்கையை ஐ.சி.சி. ஏற்கவில்லை. இறுதி முடிவை எடுப்பதற்காக பங்களாதேஷ் அணிக்கு நேற்றுவரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. […]

வாழ்வியல்

கழுத்தைப் பாதுகாப்பது எப்படி? – நிபுணர்கள் வழங்கும் 5 முக்கிய வழிமுறைகள்

  • January 22, 2026
  • 0 Comments

கழுத்து வலி என்பது வெறும் தசைப்பிடிப்பு மட்டுமல்ல, அது உங்கள் உடல் கொடுக்கும் எச்சரிக்கை சிக்னல் என்று சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பிசியோதெரபி விரிவுரையாளர் டாக்டர் பூனம் மேத்தா குறிப்பிடுகிறார். 1. மைக்ரோ பிரேக் (Micro Breaks) எடுங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு 30 முதல் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து 60-90 விநாடிகள் நில்லுங்கள். நிற்கும்போது தோள்பட்டைகளை பின்னோக்கி சுழற்றி (Shoulder rolls) ஆழமாக […]

இலங்கை செய்தி

வெளிநாட்டு உதவி: கணக்காய்வு குறித்து ஆராய்வு!

  • January 22, 2026
  • 0 Comments

வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) எட்டாவது கூட்டம் நேற்று (21) நடைபெற்றது. பாதுகாப்பு பிரதித் அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண் ஜயசேகர தலைமையில் பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் மேற்படி கூட்டம் நடைபெற்றது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நிவாரண உதவிகளை நிர்வகிப்பதில் ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அனர்த்த தயார்நிலை மற்றும் நிவாரணப் பொருட்களின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, 22 […]

விளையாட்டு

சதத்தை தவறவிட்ட குசல் மெண்டிஸ்: 272 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

  • January 22, 2026
  • 0 Comments

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணி 271 ஓட்டங்களைக் குவித்துள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமானது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 271 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் Kusal Mendis ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களை விளாசினார். ஜனித் லியகனே Janith Liyanage 46 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்து அணி சார்பில் Adil Rashid மூன்று விக்கெட்டுகளை […]

இலங்கை செய்தி

பெண்கள் அதிகாரத்தில் முன்னிலை பெற, நிறுவன கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை – ஹரிணி

  • January 22, 2026
  • 0 Comments

பெண்கள் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்க வேண்டுமானால், நிறுவன ரீதியான கட்டமைப்புகளிலும் அதிகாரப் பகிர்விலும் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்திற்கு இணையாக, உலகப் பெண்கள் மாளிகையில் நடைபெற்ற “உலகப் பெண்கள் டாவோஸ் நிகழ்ச்சி நிரல் 2026” மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். “மாறிவரும் உலகை வழிநடத்தும் பெண்கள்” எனும் தலைப்பில் அவர் […]

உலகம் செய்தி

ட்ரம்ப்– செலென்ஸ்கி சந்திப்பு: உக்ரைன் போர் விரைவில் நிறைவுக்கு

  • January 22, 2026
  • 0 Comments

உக்ரைனில் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் (Witkoff) வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை டாவோஸில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை ட்ரம்ப் சந்திக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ செல்லும் முன் கருத்து தெரிவித்த விட்காஃப், “இந்த பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஒரு கட்டத்திற்கு நாங்கள் வந்துள்ளோம்” என்று […]

இலங்கை செய்தி

இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்த சீனா நேசக்கரம்!

  • January 22, 2026
  • 0 Comments

இலங்கையில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்குரிய ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது. சீன – இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறும். மேற்படி ஒப்பந்தத்தின் பிகாரம் இலங்கையின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. சீனாவும் இலங்கையும் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டமாக, நாட்டின் […]

error: Content is protected !!