உலகம்

அமெரிக்கா முழுவதும் வீசும் பனிப்புயல் : 100 மில்லியன் மக்கள் பாதிப்பு!

  • January 23, 2026
  • 0 Comments

அமெரிக்கா முழுவதும் 100 மில்லியன் மக்கள் பேரழிவு தரும் குளிர்கால வானிலையை எதிர்நோக்கியுள்ளனர். இன்று தொடங்கும் பனிப்புயலானது வார இறுதி முழுவதும் வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நியூ மெக்ஸிகோவிலிருந்து கரோலினாஸ் வரையிலான பகுதிகள் மற்றும் வொஷிங்டன், டி.சி., பிலடெல்பியா, நியூயார்க் நகரம் மற்றும் பாஸ்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பரவலான மின் தடைகள் ஏற்படும் என்றும் முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர்.    

இந்தியா தமிழ்நாடு

தி.மு.கவை கொதிப்படைய வைத்துள்ள மோடியின் எக்ஸ் பதிவு!

  • January 23, 2026
  • 0 Comments

தமிழகத்தை ஆளும் தி.மு.கவுக்கு விடைகொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி Modi தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் நிற்கின்றது எனவும் அவர் கூறினார். பா.ஜ.க. உள்ளடங்கலாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் வந்த நிலையிலேயே மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பான பதிவை அவர், தமிழ் மொழியிலேயே பதிவிட்டுள்ளார். “ தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் […]

தமிழ்நாடு பொழுதுபோக்கு

விசில் சின்னத்துக்கு உரிமைகோரும் கஸ்தூரி!

  • January 23, 2026
  • 0 Comments

தமிழக சட்டசபைத் தேர்தலில் களமிறங்குவதற்கு தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பில் பலரும் கருத்து வெளியிட்டுவருகின்றனர். த.வெ.க. TVK தலைவர் விஜய ,விசில் சின்னத்தை விஜய் கோரிய நிலையில், அதே சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அரசியல் களத்துக்கு அப்பால் இது தொடர்பில் சினிமா உலகிலும் தற்போது பேசப்படுகின்றது. இந்நிலையில் விசில் சின்னம் குறித்து நடிகையும், அரசியல் செயற்பாட்டாளருமான கஸ்தூரி Kasthuri கருத்து வெளியிட்டுள்ளார். “ விஜய் விசில் சின்னம்தான் கேட்பார் […]

உலகம்

அமெரிக்காவில் சிறுவனை தூண்டிலாக பயன்படுத்தி தந்தையை கைது செய்த முகவர்கள்!

  • January 23, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மினியாபோலிஸில் குடிவரவு அதிகாரிகளின் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 05 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், டெக்சாஸில் உள்ள தடுப்பு காவல் மையத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுவன் பாலர் பாடசாலையில் இருந்து திரும்பிய போது குடியேற்ற முகவர்கள் அவர்களை சுற்றிவளைத்துள்ளனர். அச்சிறுவனின் தந்தையை கைது செய்ய சிறுவனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சம்பவ இடத்தில் இருந்து தந்தை தப்பியோடியதாகவும், இதனைத் தொடர்ந்து சிறுவனின் பாதுகாப்பிற்காக முகவர் ஒருவர் அந்த இடத்தில் இருந்ததாகவும்  […]

விளையாட்டு

பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து?

  • January 23, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகின்றது. இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளுக்கும் இடையில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று நடைபெறுகின்றது. இரு அணிகளுக்கும் இடையில் 5 டி20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

ஐரோப்பா

ரஷ்யா – உக்ரைன் போர் ஐரோப்பாவையே அதிகளவில் பாதிக்கிறது : ட்ரம்ப் விமர்சனம்!

  • January 23, 2026
  • 0 Comments

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று விவாதித்துள்ளார். விளாடிமிர் புடின் அமைதிக்காக “சலுகைகளை வழங்குவார்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வார இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமெரிக்கா தலைமையில் ஒரு முத்தரப்பு சந்திப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், குறித்த போர் ஐரோப்பாவையே அதிகளவில் பாதிப்பதாக சுட்டிக்காட்டினார். ஒப்பந்தம் எட்டப்பட்டால் புடின் உக்ரைன் முழுவதையும் எடுத்துக்கொள்ள மாட்டார் என்றும்  […]

உலகம் செய்தி

ஈரான்மீது அமெரிக்கா கழுகுப்பார்வை: வளைகுடா நோக்கி நகரும் படை!

  • January 23, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்க தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், வளைகுடாவை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை கப்பல் செல்வது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து Switzerland , டாவோஸில் Davos நடைபெற்ற உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் ட்ரம்ப் Donald Trump பங்கேற்றிருந்தார். மாநாடு முடிந்த பின்னர் இன்று (23) அவர் அமெரிக்கா நோக்கி பயணமானார். நாடு திரும்பும் வழியில் விமானத்திலேயே அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். “ எதுவும் நடக்க கூடாது என்பதே எனது விருப்பம். ஈரானை […]

விளையாட்டு

ஒரு நாள் தொடரை வெல்லுமா இலங்கை? நாளை 2 ஆவது போட்டி!

  • January 23, 2026
  • 0 Comments

இலங்கை SL மற்றும் இங்கிலாந்து ENG அணிகளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் ODI போட்டி நாளை (24) நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் RPS இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் ODI மற்றும் மூன்று டி20 T-20 போட்டிகளில் ஆடவுள்ளது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று (22) ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழர்களுக்கு தமது பகுதியை ஆளும் அதிகாரம் அவசியம்: ராஜித வலியுறுத்து!

  • January 23, 2026
  • 0 Comments

“மஹிந்த ஆட்சியின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க போராடியவன் நான். எனவே, அதிகாரப் பகிர்வென்பது அவசியம். தமது பகுதியை தாமே ஆளக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne வலியுறுத்தினார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு இடித்துரைத்தார். “ போர் முடிவடைந்த கையோடு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தேன். அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க […]

உலகம் செய்தி

“காசா அமைதி வாரியம்” – கனடாவிற்கான அழைப்பை மீளப் பெற்றார் ட்ரம்ப்!

  • January 23, 2026
  • 0 Comments

காசா அமைதி வாரியத்தில் இணைய கனடாவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று மீளப் பெற்றார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் இடம்பெற்ற பொருளாதார மன்றத்தில் மார்க் கானி (Mark Carney) அமெரிக்காவிற்கு எதிராக உரையாற்றியதை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், கனடாவின் அழைப்பை திரும்பப் பெறுவதாக  அறிவித்தார். இதேவேளை குறித்த குழுவில் இணைவதற்காக  30 இற்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இருப்பினும் இந்த […]

error: Content is protected !!