ஐரோப்பா

UKவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் : தலைமறைவான வெளிநாட்டு குற்றவாளிகள்!

  • January 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், சுமார் 53000 இற்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கண்டுப்பிடிக்க சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவுக்கு ( Rupert Lowe) கசிந்ததாகக் கூறப்படும் அரசாங்க ஆவணங்களில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தில் 53,298 புலம்பெயர்ந்தோர் ஜாமீனை மீறியதாகவோ அல்லது தடுப்புக்காவலில் இருந்து தப்பித்ததாகவோ கூறப்பட்டுள்ளது. மேலும் 736 வெளிநாட்டு குற்றவாளிகள் காணாமல் […]

இலங்கை செய்தி

“மாங்குளம் பேருந்து நிலையத்தை முழுமையாக இயக்குக”: அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் உத்தரவு

  • January 23, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய மையப் புள்ளியாகத் திகழும் மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மாங்குளம் பேருந்து நிலைய அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையால், தயாரிக்கப்பட்ட திட்டவரைவு பற்றி ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2026) மாலை நடைபெற்றது. மாங்குளம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் என்பன உரிய […]

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாய்குள் நுழைந்த ரஷ்ய கப்பல்கள் – விரட்டியடித்த ரோயல் படை!

  • January 23, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயில் பயணித்த ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களை பிரித்தானியாவின் ரோயல் கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  ரஷ்யாவின் கொர்வெட் போய்கி (corvette Boikiy ) மற்றும் அதனுடன் வந்த எண்ணெய் டேங்கர் கப்பலான  MT ஜெனரல் ஸ்கோபெலெவ் (General Skobelev) ஆகிய கப்பல்களே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் ஆயுதப்படை […]

ஐரோப்பா

பிரித்தானியாவை அணு ஏவுகணைகள் மூலம் தாக்குவோம் – மிரட்டி பார்க்கும் ரஷ்யா!

  • January 23, 2026
  • 0 Comments

​​அணு ஏவுகணைகள் மூலம் பிரித்தானியாவை அழிக்கப்போவதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பேராசிரியர் டூம்ஸ்டே என்று அழைக்கப்படும் புடினின்  ஆலோசகர் செர்ஜி கரகனோவ் (Sergei Karaganov) ரஷ்ய தொலைக்காட்சியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “குறைந்தபட்சம், இலக்குகளில் ஒன்று பிரித்தானியாவாக இருக்க வேண்டும். நாம் தயாராக இருக்க வேண்டும்,   தலை துண்டிக்கும் தாக்குதலை நடத்தும் திறன் எங்களிடம் உள்ளது என்பதை பிரித்தானியா புரிந்துக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். உக்ரைன் – ரஷ்ய போர் குறித்த சமாதான பேச்சுவார்தைகள் இடம்பெற்று […]

பொழுதுபோக்கு

  • January 23, 2026
  • 0 Comments

“திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்ற முதுமொழிக்கு ஏற்ப, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் புகழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இறங்கியுள்ளார். அவர் இசையமைத்துப் பாடியுள்ள திருவாசகப் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் தனது தனித்துவமான குரலில், மென்மையான இசையமைப்பில் இப்பாடலை உருவாக்கியுள்ளார். நவீன இசைக்கருவிகளுடன் பாரம்பரியமான பக்தி உணர்வு குறையாமல் இப்பாடல் செதுக்கப்பட்டுள்ளது. ஆன்மீகப் பாடல்களை விரும்புவோர் மட்டுமின்றி, இளைஞர்களையும் […]

இலங்கை செய்தி

மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 45 கோயில்களுக்கு கொடுப்பனவு

  • January 23, 2026
  • 0 Comments

டிட்வா புயலினால்  மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவிலும்  பாதிப்படைந்த இந்து கோயில்களை சுத்திகரிக்கும் பணிக்களுக்காக 25,000 ஆயிரம் ரூபாய் காசோலை  வழங்கும் நிகழ்வு மன்னார் மாவட்டச்  செயலகத்தில் இன்றைய தினம்   இடம்பெற்றது. மன்னார் மாவட்ட செயலாளர் க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், பாதிப்புக்குள்ளான  42 ஆலயங்களின் பரிபாலன சபையினர் காசோலைகளை பெற்றுக் கொண்டனர். இதன்போது அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட டிட்வா  புயலின்போது இலங்கையின் […]

ஐரோப்பா செய்தி

ஹீத்ரோ விமான நிலையத்தில் இன்று முதல் புதிய மாற்றம்

  • January 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் மிகப்பெரிய விமான நிலையமான லண்டன் ஹீத்ரோவில், பயணிகளுக்கான திரவப் பொருட்கள் தொடர்பான நீண்டகால கட்டுப்பாடுகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளன. புதிய அதிநவீன ‘CT’ ஸ்கேனர்கள் (CT Scanners) அனைத்து முனையங்களிலும் (Terminals) பொருத்தப்பட்டுள்ளதால், இனி பயணிகள் தங்களது கைப்பைக்குள் 2 லீற்றர் வரையான திரவப் பொருட்களை எவ்விதத் தடையுமின்றி எடுத்துச் செல்ல முடியும். கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்த 100 மில்லி லீற்றர் (100ml) கட்டுப்பாடு இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. […]

இந்தியா செய்தி

கேரளாவிலும் பாஜக ஆட்சி: குஜராத்தை உதாரணமாகக் காட்டிய பிரதமர் மோடி

  • January 23, 2026
  • 0 Comments

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தைப் போலவே கேரளாவிலும் விரைவில் பாஜக ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 1987-இல் அகமதாபாத் மாநகராட்சியில் தொடங்கிய வெற்றிப் பயணம் குஜராத் மாநிலத்தையே மாற்றியதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போது திருவனந்தபுரத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி மாநிலம் முழுவதும் எதிரொலிக்கும் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து, மூன்று ‘அமிர்த பாரத்’ விரைவு ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த அவர், நவீன கதிரியக்க அறுவை சிகிச்சை மையம் […]

#MankathaReRelease #AjithKumar #ThalaAjith #MankathaCelebrations #CinemaUpdate #TamilCinema பொழுதுபோக்கு

அதிரும் தியேட்டர்கள்! 15 ஆண்டுகளுக்குப் பின்னும் ‘மங்காத்தா’ மேஜிக்.

  • January 23, 2026
  • 0 Comments

2011-ல் வெளியாகி தமிழ் சினிமாவின் ‘கல்ட் கிளாசிக்’ கேங்ஸ்டர் படமாக உருவெடுத்த அஜித்தின் ‘மங்காத்தா’, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி புதிய வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகிறது. தமிழக வரலாற்றிலேயே மீண்டும் திரையிடப்பட்ட ஒரு படத்திற்கு, ‘புக் மை ஷோ’ (BookMyShow) தளத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. தற்போதைய புதுப்படங்களுக்கு இணையாக மங்காத்தா ‘மரண பயத்தை’ காட்டி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் காலை […]

உலகம் செய்தி

போர் முடிவா நாடகமா – அபுதாபியில் ரஷ்யா–உக்ரைன்–அமெரிக்கா முத்தரப்பு பேச்சு

  • January 23, 2026
  • 0 Comments

2022 பெப்ரவரி மாதத்தில் ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியதற்குப் பிறகு, முதன்முறையாக ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தைகள்  அபுதாபியில் இன்று நடைபெறுகின்றன. உக்ரைனுக்கு கடினமான நேரத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தைகள், ரஷ்யா அமைதிக்காக உண்மையாகவே முயற்சிக்கிறதா அல்லது நேரத்தை வீணடிக்கிறதா  என்பதை அறிய ஒரு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, இந்த பேச்சுவார்த்தைகள் “போரைக் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நம்பிக்கையின் ஒரு படி” என்று கூறினார். இந்த […]

error: Content is protected !!