அரசியல் இலங்கை செய்தி

யாழில் அநுர ஆற்றிய உரை சரியானதே: சாணக்கியன் சான்று!

  • January 24, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. அதனை நாம் ஆதரிக்கின்றோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் R. Shanakiyan தெரிவித்தார். எனினும், ஜனாதிபதியின் உரையை சிலர் திரிவுப்படுத்தி இனவாதமாக்குவதற்கு முற்படுகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டார். “யாழிலுள்ள நாக விகாரைக்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய விகாரைக்கோ வழிபட செல்ல வேண்டாம் என ஜனாதிபதி குறிப்பிடவில்லை. வடக்கில் ஒரு விகாரையை […]

விளையாட்டு

இங்கிலாந்தை இன்றும் வேட்டையாடுமா இலங்கை?

  • January 24, 2026
  • 0 Comments

புத்தாண்டில் ஒருநாள் ODI தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்த இலங்கை அணி, இங்கிலாந்துடன் இன்று (24) இரண்டாவது போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றது. 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில், இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரை வெல்லும். மறு முனையில் இலங்கைக்கு பதிலடி கொடுத்து, தொடரை வெல்வதற்குரிய முனைப்பில் இங்கிலாந்து அணியும் களமிறங்கவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். முதலாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் (22) […]

அரசியல் இலங்கை செய்தி

தாய்வீடு திரும்பிவிட்டேன்: மொட்டு கட்சியுடன் இணைந்த ரமேஷ் பத்திரன பெருமிதம்!

  • January 24, 2026
  • 0 Comments

“ தாய்வீட்டுக்கு மீண்டும் வந்துவிட்டேன். இனி வலுவான முறையில் அரசியல் பயணம் தொடரும்.” – என்று முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன Ramesh Pathirana தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரமேஷ் பத்திரன மொட்டு கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவில்லை. சிலிண்டர் கூட்டணியில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். இந்நிலையிலேயே நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு காலி, எல்பிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியை கட்சியின் தேசிய அமைப்பாளர் […]

அரசியல் இலங்கை செய்தி

மக்கள் முடிவெடுத்தால் பதவி வீடு செல்ல தயார்: பிரதமர் திட்டவட்டம்!

  • January 24, 2026
  • 0 Comments

“நம்பிக்கையில்லாப் பிரேரணை தேவையில்லை, நாட்டு மக்கள் தீர்மானிக்கும் பட்சத்தில் பதவி துறந்து வீடு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி Dr. Harini Amarasooriya அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த திட்டவட்ட அறிவிப்பை வெளியிட்டார். “ ஆட்சியைக் கவிழ்த்துக்கொள்வதற்கே எதிரணி முயற்சிக்கின்றது. டிசம்பரில் புதிய ஜனாதிபதி என்றார்கள், தற்போது ஏப்ரல் என்கின்றார்கள். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்கிறார்கள். எப்போது அது வரும்? அந்த பிரேரணை வரும்வரைதான் […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 5 பேர் மரணம்

  • January 23, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின்(Pakistan) வடமேற்கு கைபர் பக்துன்க்வா(Khyber Pakhtunkhwa) மாகாணத்தில் அமைதிக் குழு உறுப்பினர் ஒருவரின் திருமண கொண்டாட்டத்தின் போது நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பத்து பேர் காயமடைந்துள்ளனர். குரேஷி மோர்(Qureshi Mor) அருகே அமைதிக் குழுத் தலைவர் நூர் ஆலம் மெஹ்சுத்தின்(Noor Alam Mehsud) வீட்டில் நடந்த திருமண கொண்டாட்டத்தின் போது தற்கொலை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரி சஜ்ஜாத் அகமது சாஹிப்சாதா(Sajjad Ahmed Sahibzada) உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், தாக்குதல் நடந்த […]

உலகம் செய்தி

சகோதரரை துணை பிரதமராக நியமித்த ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி

  • January 23, 2026
  • 0 Comments

ஐவரி கோஸ்ட்(Ivory Coast) ஜனாதிபதி அலசேன் ஔட்டாரா(Alassane Ouattara), அமைச்சரவை மறுசீரமைப்பில் தனது சகோதரரான பாதுகாப்பு அமைச்சர் டெனே பிரஹிமா ஔட்டாராவை(Dene Brahima Ouattara) புதிதாக உருவாக்கப்பட்ட துணைப் பிரதமராக நியமித்துள்ளார். மேலும், அவர் தனது பாதுகாப்புத் துறையுடன் சேர்த்து துணைப் பிரதமர் பதவியையும் வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் ஔட்டாரா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அவரது கட்சி வெற்றி பெற்று, நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றதையும் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி அரசியல்வாதியின் மோசமான செயல்

  • January 23, 2026
  • 0 Comments

முன்னாள் பிரிட்டிஷ்(British) நகர கவுன்சிலர் ஒருவர் தனது முன்னாள் மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். தெற்கே பிரித்தானியாவில் உள்ள ஸ்விண்டன்(Swindon) பெருநகர கவுன்சிலில் பணியாற்றிய 49 வயதான பிலிப் யங்(Philip Young), 2010 மற்றும் 2023க்கு இடையில் முன்னாள் மனைவி ஜோன் யங்கிற்கு(Joan Young) எதிராக 48 குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். வின்செஸ்டர் கிரவுன்(Winchester Crown) நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் கன்சர்வேடிவ்(Conservative) கட்சி அரசியல்வாதி, பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள், போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் மற்றும் பாலியல் […]

இந்தியா செய்தி

டெல்லியில் 10 நாட்களுக்கு முன் காணாமல் போன 3 வயது குழந்தை சடலமாக மீட்பு

  • January 23, 2026
  • 0 Comments

தென்கிழக்கு டெல்லியில்(Delhi) தனது வீட்டிலிருந்து காணாமல் போன மூன்று வயது குழந்தையின் உடல் ஜெய்த்பூர்(Jaitpur) பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள வடிகாலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஜனவரி 13ம் திகதி ஆட்டோ ஓட்டுநரான குழந்தையின் தந்தை, ராஜு(Raju) தனது மகன் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். பின்னர் குழந்தையை கண்டுபிடிக்க 16 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் […]

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி

  • January 23, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இன்று முதலாவது டி20 போட்டி ராய்ப்பூர்(Raipur) நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில், ரச்சின் ரவீந்திரா(Rachin Ravindra) 44 ஓட்டங்களும் மிச்சேல் […]

error: Content is protected !!