இலங்கை

உலகில் சொத்து வாங்க முடியாத நகரமாக கொழும்பு தெரிவு!

  • January 24, 2026
  • 0 Comments

உலகில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு கடினமான அல்லது வாங்க முடியாத நகரமாக கொழும்பு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு தரவுத்தளமான நம்பியோவின் சமீபத்திய சொத்து விலைக் குறியீட்டில் இந்நகரம் இடம்பிடித்துள்ளது. கொழும்பில் விலை-வருமான விகிதம் 55.3 சதவீதம் என்று தரவு காட்டுகிறது, அதாவது சராசரி சொத்தின் விலை சராசரி ஆண்டு வருமானத்தை விட 55 மடங்கு அதிகமாகும். மேலும், சராசரி குடியிருப்பாளரின் அடமானச் சுமை திகைப்பூட்டும் வகையில் உள்ளது, அடமானக் கொடுப்பனவுகள் ஆண்டு வருமானத்தில் 774% […]

உலகம்

”ஈரான் எந்தவொரு தாக்குதலையும் முழுமையான போராக கருதும்” – அமெரிக்காவிற்கு பதிலடி!!

  • January 24, 2026
  • 0 Comments

ஈரான் எந்தவொரு தாக்குதலையும் “எங்களுக்கு எதிரான முழுமையான போராக” கருதும் என்று அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று  குறிப்பிட்டுள்ளார். வரும் நாட்களில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ கப்பல் மற்றும் குழுவினர் நிலைநிறுத்தப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவ் அதிகாரி, “இந்த இராணுவக் குவிப்பு – இது உண்மையான மோதலுக்காக அல்ல என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் எங்கள் இராணுவம் மோசமான சூழ்நிலைக்கு தயாராக உள்ளது” எனக் […]

விளையாட்டு

2026 ஐசிசி இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடர்: பங்களாதேஷ் நீக்கம் – ஸ்கொட்லாந்துக்கு வாய்ப்பு

  • January 24, 2026
  • 0 Comments

2026 ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணி உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணி இத்தொடரில் பங்கேற்பதை சர்வதேச கிரிக்கட் சபை (ICC) உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உத்தரவுக்கமைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவித்ததைத் தொடர்ந்து, வீரர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, தனது உலகக்கிண்ணப் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை 2026 […]

உலகம்

புதிய பாதுகாப்பு உத்தியை வெளியிட்ட அமெரிக்கா – சீனாவை கைவிட்டது!

  • January 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா  புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை அறிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு உத்திகளில்  முன்பிருந்ததை விட குறிப்பிடத்தக்க மாற்றத்தை காணக்கூடியதாக உள்ளது. புதிய உத்தியின்படி, சீனாவை முதன்மை பாதுகாப்பு சவாலாகக் கருதுவதை கைவிட்டு  அமெரிக்க தாயகம் மற்றும் மேற்கு அரைக்கோளத்தின் பால் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு முன்பு வெளியிடப்பட்ட பாதுகாப்பு உத்திகளில் அமெரிக்கா எதிர்கொள்ளும் முக்கிய கள பாதுகாப்பு அச்சுறுத்தலாக சீனா பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் புதிய உத்தி அமெரிக்கா ஆதரிக்கும் கட்சிகளுக்கு அதிக பொறுப்பை […]

இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள் – பறிதாபமாக உயிரிழந்த பெண்!

  • January 24, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து  குதித்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். நேற்று (23) மாலை 7.15 மணியளவில் குறித்த இளம் பெண் பாலத்தில் இருந்து குளத்தில் குதித்தார், அப்போது மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் குழுவொன்று இதனை அவதானித்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன் பிரதேசவாசிகளுடன் இணைந்து யுவதியின் உடலை மீட்டுள்ளனர்.  ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த இளம் பெண் கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி என்றும், காதல் விவகாரம் காரணமாக […]

அரசியல் இலங்கை செய்தி

அடுத்த 15 ஆண்டுகளுக்கு NPP அரசை அசைக்க முடியாது!

  • January 24, 2026
  • 0 Comments

“ தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்தை அடுத்த 15 வருடங்களுக்கு அசைக்க முடியாது.”- என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஊழல், மோசடிக்கு இடமில்லை. நாம் மக்கள் மத்தியில் உண்மையைக் கூறி செயல்பட்டுவருகின்றோம்.எனவே, எமது ஆட்சி தொடர்வதற்கு மக்கள் ஆணை வழங்குவார்கள். நவீன உலகை வெல்ல வேண்டுமெனில் […]

ஐரோப்பா

உக்ரைனில் ட்ரோன் மழை பொழிந்த ரஷ்யா – அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தாக்குதல்!

  • January 24, 2026
  • 0 Comments

உக்ரைனின் இரண்டு பெரிய நகரங்களான கீவ் மற்றும் கார்கிவ் ஆகியவை மீது ரஷ்யா நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கீவ் நகரில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபுதாபியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற சிலமணி நேரங்களில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்யா தான் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருக்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் ரஷ்யா டொன்பாஸ் பகுதியை தக்கவைத்துக் […]

அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலையைக் காண்பித்து எம்மை மிரட்ட முடியாது: நாமல் சூளுரை!

  • January 24, 2026
  • 0 Comments

“சிறைச்சாலைகளைக் காண்பித்து எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அஞ்சப்போவதில்லை.”- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். “ நாட்டு மக்கள் வழங்கும் செய்தி என்னவென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு புரிந்துகொண்டதாக தெரியவில்லை. இதற்கான பதில் அடுத்த தேர்தலில் கிடைக்கப்பெறும். சிறைச்சாலைகளை காண்பித்து, எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது. அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரல்மூலம் எம்மை ஒடுக்க […]

இலங்கை

நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கையில் எந்த பிரயோசனமும் இல்லை – M.A சுமந்திரன்

  • January 24, 2026
  • 0 Comments

நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கையில் எந்த பிரயோசனமும் இல்லை. பொங்கல் விழாவிலே நாங்கள் ஈடுபடுகின்ற போது ஒரு எதிர்பார்ப்பை நாங்கள் வெளிப்படுத்துகின்றோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதே இதனை உணர்த்துகின்றது என எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். திருகோணமலை  பிரதேச சபையில் இன்று (24) இடம் பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  எமது தலைவர் இரா சம்பந்தன் ஐயா அவர்கள் […]

error: Content is protected !!