இலங்கை செய்தி

இங்கிலாந்தில் தற்காலிக குடியிருப்புகளில் வாழும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு

  • January 25, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷெல்டர் (Shelter) அமைப்பு மற்றும் ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆய்வில், சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் குழந்தைகள் தற்காலிக வீடுகளில் வசிப்பது தெரியவந்துள்ளது. முறையான வசதிகள் இல்லாததால், பள்ளிகளே மாணவர்களுக்கு உணவுக் களஞ்சியங்களைப் பரிந்துரைப்பதோடு, அவர்களின் சீருடைகளைத் துவைத்துக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சுமார் 49 சதவீத பள்ளிகள் மாணவர்களை உணவுக் களஞ்சியங்களுக்கு அனுப்பி வருகின்றன. ஈஸ்ட் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

கிரீன்லாந்தை புரட்டி எடுத்த புயல் – அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்குமாறு அறிவிப்பு

  • January 25, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தின் தலைநகர் நூக் (Nuuk, Greenland) நகரில் பலத்த காற்று காரணமாக மின் பரிமாற்றத்தில் தொழினுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக பிரதான பக்ஸ்ஃப்ஜோர்டு(Buksefjord) நீர்மின் நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் சில பகுதிகளில் நீர் விநியோகம் மற்றும் இணைய சேவைகளும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சீரமைப்பு பணிகளில் அவசர மின் நிலையம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர், உணவு, மருந்து, ஆடைகள் மற்றும் மாற்று தகவல் சாதனங்களை குறைந்தது ஐந்து நாட்களுக்கு சேமித்து […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்து தீவிபத்து சம்பவம் : விடுதி உரிமையாளரின் விடுதலையை கடுமையாக எதிர்க்கும் இத்தாலி!

  • January 25, 2026
  • 0 Comments

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்தில் இடம் பெற்ற தீவிபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் “லெ கான்ஸ்டெல்லேஷன்”  (Le Constellation) என்ற மதுபானக் கடையின் உரிமையாளர் ஜாக் மோரெட்டி (Jacques Moretti) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார். அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.  இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை இத்தாலி கடுமையாக சாடியுள்ளது. இந்த தீ விபத்தில் 06 இத்தாலியர்கள் […]

ஐரோப்பா செய்தி

மது அருந்தவே கட்சியில் இணைந்தேன் – வெளிப்படையாக கூறிய கன்சர்வேடிவ் கட்சி தலைவர்

  • January 25, 2026
  • 0 Comments

சமூகமயமாக்குதல், மது அருந்துதல், இளைஞர்களுடன் நேரத்தை செலவிடுதல் போன்ற காரணங்களுக்காக ஆரம்பத்தில் கன்சர்வேடிவ் கட்சியில் இணைந்ததாக அந்த கட்சியின் தலைவர் கெமி படேனோக்  (Kemi Badenoch) தனது அரசியல் பயணம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். பிபிசி ரேடியோ 4 இன் டெசர்ட் ஐலேண்ட் (Desert Island ) நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டு மோசமான பொதுத் தேர்தல் தோல்விக்கு பிறகு அவர் கட்சியின் தலைமைப்பணியை ஏற்றுக் கொண்டார். […]

ஐரோப்பா செய்தி

போர் பத்திரங்கள்’ வெளியிட வேண்டும் – பிரித்தானியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துமாறு வலியுறுத்தல்

  • January 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்த போர் பத்திரங்கள் (War Bonds) வெளியிட வேண்டும் என்று லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி (Liberal Democrats) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் £20 பவுண்ட் பில்லியன் வரை திரட்ட முடியும் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கால அவகாசம் கொண்ட பத்திரங்கள் மூலம் அரசாங்கத்திற்கு கடன் வழங்கலாம். இவை வழக்கமான அரசாங்கப் பத்திரங்களைப் போலவே நிலையான வட்டியுடன் […]

இலங்கை செய்தி

Update ; கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல் ; அதிகாரிகள் அறுவருக்கு விளக்கமறியல்

  • January 25, 2026
  • 0 Comments

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல் நடத்தியதாக கைதுசெய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் அறுவரையும் நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.         கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல் ; 6 பொலிஸ் அதிகாரிகள் கைது

இலங்கை

சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு சென்ற குழு மீது துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்!

  • January 25, 2026
  • 0 Comments

சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டு செல்ல முயன்ற  குழுவை கைது செய்ய முயன்றபோது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்  நபர் ஒருவர்  காயமடைந்த நிலையில்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (25) அதிகாலை 2.35 மணியளவில்  தலஹேன சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. நல்லா காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள்  ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தலஹேன கிராமத்திற்குள் நுழையும் சாலையின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றை சோதனை செய்துள்ளனர். அந்த நேரத்தில், ஐந்து பேர் லொறியில் […]

ஐரோப்பா செய்தி

சக அமைச்சர்களுக்கு உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் எச்சரிக்கை

  • January 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் ஆளும் லேபர் கட்சிக்குள் தற்போது அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டர் மேயராக இருக்கும் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), கோர்டன் மற்றும் டென்டன் (Gorton and Denton) இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இது பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைக்கு விடுக்கப்படும் சவாலாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood), கட்சிக்குள் தேவையற்ற “உளவியல் நாடகங்களை” (psychodrama) தவிர்க்க வேண்டும் […]

ஐரோப்பா செய்தி

பலஸ்தீன ஆதரவு – லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட 86 பேர் கைது

  • January 25, 2026
  • 0 Comments

பலஸ்தீன நடவடிக்கையுடன் தொடர்புடைய ஒரு செயற்பாட்டாளருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய 86 பேர் கொண்ட குழுவொன்று, லண்டனில் உள்ள வோர்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறைச்சாலை (Wormwood Scrubs Prison) வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலை மைதானத்தில் அத்துமீறல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள் மைதானத்தை விட்டு வெளியேற மறுத்ததுடன், சிறை ஊழியர்கள் உள்ளே நுழைவதையும் வெளியேறுவதையும் தடுத்ததாகவும், பொலிஸ் அதிகாரிகளை (Police officers) அச்சுறுத்தியதாகவும் பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில போராட்டக்காரர்கள் சிறைச்சாலை கட்டிடத்தின் ஊழியர் நுழைவாயிலுக்குள் […]

இலங்கை செய்தி

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல் ; 6 பொலிஸ் அதிகாரிகள் கைது

  • January 25, 2026
  • 0 Comments

கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் ஆறு அதிகாரிகள், கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கிிரிந்திவிட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதிரியாரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டபோது ஏற்பட்ட தர்க்கம், இந்தத் தாக்குதலில் முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த பாதிரியார் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

error: Content is protected !!