இலங்கை செய்தி

நாட்டைவிட்டு வெளியேற முடியாது – எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவன இயக்குநர்களுக்கு எதிராக பெறப்பட்ட அதிரடி உத்தரவுகள்

  • January 26, 2026
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின், உள்நாட்டு பிரதிநிதி நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தாலும் கொழும்பு உயர்நீதிமன்றத்தாலும் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (26) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களின் தீர்ப்புகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பரிசீலனை செய்வதற்காக அந்த மனுக்கள் இன்று மீண்டும் அழைக்கப்பட்டன. இதன்போது சட்டமா அதிபர் சார்பில் […]

அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயாத் திட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கைவிடுமாறு வலியுறுத்து!

  • January 26, 2026
  • 0 Comments

கிவுல் ஓயாத் திட்டம் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்ணி Democratic Tamil National Alliance வலியுறுத்தியுள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் Suresh K. Premachandran இது தொடர்பான வலியுறுத்தலை இன்று (26) விடுத்துள்ளார். இது தொடர்பில் அவரால் விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு , ” கிவுல் ஓயா என்ற ஒரு நீர்ப்பாசனத் திட்டத்துக்கான […]

அரசியல் இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்புக்கு முழு ஆதரவு: சஜித் விசேட அறிவிப்பு!

  • January 26, 2026
  • 0 Comments

கல்வி சீர்திருத்தங்களை education reforms முறையாக முன்னெடுப்பதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இன்று (26) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ தரம் 6 இற்குரிய பாட அலகுச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுக்கத் தவறியதால் ஏராளமான பிள்ளைகள் இன்று பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். கல்விச் சீர்திருத்தங்களை இடைநிறுத்திய பழியை எதிர்க்கட்சியின் மீது சுமத்துவதற்கு ஆளுங்கட்சி முயற்கின்றது. அந்த […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவை நாளை தாக்க போகும் புயல் சந்திரா – மக்களுக்கு அவசர அறிவிப்பு

  • January 26, 2026
  • 0 Comments

புயல் சந்திரா (Chandra) பிரித்தானியாவை நாளை செவ்வாய்க்கிழமை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானிய வானிலை அலுவலகம் பலத்த காற்று மற்றும் மழை வீழ்ச்சிக்கான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. கோரெட்டி மற்றும் இங்க்ரிட் புயல்களுக்கு பிறகு, இந்த மாதம் பிரித்தானியாவை தாக்கும் மூன்றாவது பெரிய புயல் சந்திராவாகும். வடக்கு அயர்லாந்தில் கிழக்குப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அம்பர் காற்று எச்சரிக்கை அமலில் இருக்கும். கடுமையான காற்று மணிக்கு 120 கிமீ […]

ஐரோப்பா

தொடரும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் : இழுபறியில் போர் நிறுத்தம்!

  • January 26, 2026
  • 0 Comments

உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு “100 சதவீதம் தயாராக” இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் உக்ரைனுக்கு முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் மற்றும் உக்ரைன் பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் […]

man-found-dead-burnt-in-field-watching இலங்கை

வயல் காவலுக்குச் சென்றவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!!

  • January 26, 2026
  • 0 Comments

திருகோணமலை- நாமல்வத்த பகுதியில் வயல் காவலுக்குச் சென்றவர் எரிந்த நிலையில் இன்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம். தாசுதீன் (61வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அவருடைய வயலுக்கு காவலுக்குச் சென்றவர் இன்று (26) ம் திகதி 01 மணிவரைக்கும் வீட்டுக்கு வராத காரணத்தினால் அவரைத் தேடி பக்கத்து வீட்டார் சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த நபர் வயலில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்துக்கு உள்ளே குளிர் காரணமாக […]

இலங்கை செய்தி

யாழ். விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டங்களை பறக்க விடுவதால் பாரிய ஆபத்து – சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

  • January 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தல் தொடர்பான சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள , காங்கேசன்துறை , மாவிட்டபுரம் , வறுத்தலை விளான் , பலாலி , மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

30 ஆண்டுகால அரசியல் பயணம் – கட்சித் தாவினார் சுயெல்லா பிரேவர்மேன்!

  • January 26, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் கன்சர்வேடிவ் கட்சியின்  உள்துறை செயலாளராக பணியாற்றிய  சுயெல்லா பிரேவர்மேன் ( Suella Braverman) தற்போது சீர்த்திருத்த யுகே (Reform UK) கட்சிக்கு மாறியுள்ளார். லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் 30 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரேவர்மேன்,  ஃபேர்ஹாம் (Fareham) மற்றும் வாட்டர்லூவில் (Waterlooville) தொகுதியை  பிரிதிநிதித்துவப்படுத்தும் எம்.பியாக பொறுப்பேற்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்த அரசியல் மாற்றத்தை தொடர்ந்து நிகல் ஃபராஜின் ( Nigel Farage) கட்சியில் உள்ள எம்.பி.க்களின் […]

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை (Kattankudy Base Hospital) லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை (Laparoscopic Surgery) இலங்கை செய்தி

காத்தான்குடி வைத்தியசாலையில் சாதனை: லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை!

  • January 26, 2026
  • 0 Comments

இன்று காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் மகளிர் மருத்துவத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக லேப்ராஸ்கோபிக் ஹிஸ்டெரெக்டமி (Laparoscopic Hysterectomy) என்ற நவீன குறைந்த காயம் கொண்ட கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. வைத்திய அத்தியட்சகர் Dr. M.S.M.ஜாபிர் அவர்களுடைய பூரண வழிகாட்டலின் கீழ் மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் விசேட வைத்திய நிபுநர். டாக்டர் M சிவதீபன்ராஜ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. லேப்ராஸ்கோபிக் ஹிஸ்டெரெக்டமி என்பது பாரம்பரிய திறந்த அறுவை சிகிச்சை முறைகளுக்கு […]

உலகம்

காசா பகுதியின் முக்கிய எல்லையை திறக்க நிபந்தனை விதித்த இஸ்ரேல்!

  • January 26, 2026
  • 0 Comments

எகிப்துடனான காசா பகுதியின் முக்கிய எல்லைக் கடவையை மீளவும் திறக்க இஸ்ரேல்  ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காசா பகுதியில் எஞ்சியிருக்கும் கடைசி இஸ்ரேலிய பணயக்கைதியின் உடலை மீட்கும் நடவடிக்கை முடிந்த பின்னரே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி பணயக்கைதியான மாஸ்டர் சார்ஜென்ட் ரன் க்விலியின் (Master Sgt Ran Gvili) உடலைத் திருப்பி அனுப்ப ஹமாஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலிய அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது. இதற்கிடையே  காசாவின் வட […]

error: Content is protected !!