உலகம் செய்தி

அஜர்பைஜானில் தூதரக தாக்குதலுக்கு திட்டமிட்ட மூன்று இளைஞர்கள் கைது

  • January 27, 2026
  • 0 Comments

அஜர்பைஜான்(Azerbaijani) தலைநகர் பாகுவில்(Baku) உள்ள ஒரு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூன்று பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் கொராசன்(Khorasan) மாகாணத்தில் உள்ள ISI(ISIS) துணை அமைப்பின் உறுப்பினர்களுடன் சதி செய்ததாக அரசு பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 2000ம் ஆண்டில் பிறந்தவர் என்றும் மற்ற இருவரும் 2005ல் பிறந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத விரோதத்தின் அடிப்படையில் பயங்கரவாதத்திற்கு திட்டமிடல் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் […]

உலகம் செய்தி

இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சு – இஸ்ரேலியரின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலியா

  • January 27, 2026
  • 0 Comments

இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இஸ்ரேலிய சமூக ஊடக பிரபலம் ஒருவரின் விசாவை ஆஸ்திரேலியா(Australia) ரத்து செய்துள்ளது. இஸ்லாம் ஒரு அருவருப்பான சித்தாந்தம் என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த சமி யாஹூத்(Sammy Yahood), இஸ்ரேலில் இருந்து புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு தனது விசா ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். வெறுப்பு அடிப்படையில் மக்களின் விசாக்களை நிராகரிக்க கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட அதே சட்டத்தின் கீழ் யாஹூதின் விசா ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமி […]

சட்டவிரோதமான முறையில் கசிப்பு மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தீவிரம். இலங்கை

திருகோணமலை ரொட்டவெவ: கசிப்பு மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!!

  • January 27, 2026
  • 0 Comments

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் கசிப்பு மற்றும் கஞ்சா போதை பொருளுடன் மூன்று இளைஞர்களை இன்றிரவு (27) கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 20 ற்கும் 30இற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் குறித்த இளைஞர்கள் கஞ்சா மற்றும் கசிப்பு போதை பொருட்களை பாவித்து வருவதாக பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிஸார் வீடொன்றினை சுற்றி வளைத்த போது குறித்த […]

இந்தியா செய்தி

குஜராத்தில் பயங்கரவாத குற்றச்சாட்டில் 22 வயது இளைஞர் கைது

  • January 27, 2026
  • 0 Comments

குஜராத்(Gujarat) பயங்கரவாத எதிர்ப்புப் படை(ATS) மற்றும் நவ்சாரி(Navsari) காவல்துறை இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையில், தேச விரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட சதி செய்ததாகக் கூறப்படும் 22 வயது இளைஞரை கைது செய்துள்ளனர். நவ்சாரியின்(Navsari) சரக்வாட்(Sarakwad) பகுதியில் ஃபைசான் ஷகில் சல்மானி(Faizan Shakil Salmani) என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநிலம் ராம்பூரில்(Rampur) உள்ள துண்டாவாலாவைச்(Dhundawala) சேர்ந்த ஃபைசான், நவ்சாரியில் தையல்காரராகப் பணிபுரிந்து வந்தார். அவர் தனது சொந்த மாநிலத்தில் […]

இலங்கை செய்தி

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – 28 வயது இளைஞர் மரணம்

  • January 27, 2026
  • 0 Comments

அம்பலாங்கொடை(Ambalangoda) சுனாமிவத்தை(Tsunamiwatta) பகுதியில் நடைபெற்ற தனியார் விருந்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருந்தில் கலந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுடப்பட்டதில் பாதிக்கப்பட்டவர் காயமடைந்தார். பின்னர் அவர் பலபிட்டிய(Balapitiya) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், ,துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தாக்குதலில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தொடர்புடைய செய்தி அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

புகைப்பட தொகுப்பு

மயில் போல பொண்ணு ஒன்னு

  • January 27, 2026
  • 0 Comments

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே அதிக கிளாமருடன் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். இரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்த திவ்யபாரதிக்கு ஒருகட்டத்தில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் சின்ன ரோலில் நடித்து […]

உலகம் செய்தி

சீனாவில் பனிச்சிறுத்தையுடன் புகைப்படம் எடுக்க முயன்ற பெண் வீரருக்கு நேர்ந்த கதி

  • January 27, 2026
  • 0 Comments

வடமேற்கு சீனாவில்(China) புகைப்படம் எடுக்க அருகில் செல்ல முயன்ற ஒரு சுற்றுலாப் பயணியை பனிச்சிறுத்தை ஒன்று தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஜின்ஜியாங்(Xinjiang) பிராந்தியத்தில் உள்ள கோக்டோகாய்(Koktokai) நகரில், ஒரு பெண் பனிச்சறுக்கு வீரர், தங்கள் ஹோட்டலுக்குத் திரும்பிச் செல்லும்போது தாக்கப்பட்டதாக வனவியல் மற்றும் புல்வெளி பணியகம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் வைரலான வீடியோக்களில், சுற்றுலாப் பயணி பனி தரையில் அசையாமல் கிடப்பதையும் சிறுத்தை அருகில் அமர்ந்திருப்பதையும் காட்டியது. இந்நிலையில், சுற்றுலாப் பயணி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், […]

ஐரோப்பா

அட்லாண்டிக் பெருங்கடலில் போதைப் பொருள் கடத்தல் முறியடிப்பு : அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டு நடவடிக்கை!

  • January 27, 2026
  • 0 Comments

அட்லாண்டிக் பெருங்கடலில்  பயணித்த  ‘நார்கோ நீர்மூழ்கிக் கப்பல்’ ஒன்றிலிருந்து 09  டன் கோகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த போதைப் பொருட்களை முழுமையாக எடுத்துச் செல்வதற்கு முன்பே குறித்த கப்பல் நீரில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளின் உதவியுடன் போர்த்துகீசிய காவல்துறை இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் இந்தப் படகு லத்தீன் அமெரிக்காவிலிருந்து வருகை தந்ததாகவும், அதில் மூன்று கொலம்பியர்களும் ஒரு வெனிசுலா நாட்டவரும் இருந்தனர் […]

இலங்கை செய்தி

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

  • January 27, 2026
  • 0 Comments

அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். சற்று முன்னர் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கலகொட, சுனாமிவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதுடன், நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

செய்தி விளையாட்டு

ஒருநாள் தொடர் – இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து

  • January 27, 2026
  • 0 Comments

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், கொழும்பு ஆர். பிரேமதாச(R. Premadasa) மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில், ஜோ ரூட்(Joe Root) 111 ஓட்டங்களும் ஹரி புரூக்(Harry Brook) 136 ஓட்டங்களும் […]

error: Content is protected !!